பெரியகுளத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்கினால் மட்டுமே பணிகளை மேற்கொள்வோம் என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பெரியகுளம் நகராட்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தபணியாளர்களாக 60 பேர் நியமனம் செய்யப்பட்டு பெரியகுளம் நகர் பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை. இது குறித்து பலமுறை அவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. இதனால் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பளம் வழங்கினால் மட்டுமே தூய்மை பணிகளை மேற்கொள்வோம் என அவர்கள் கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபர ப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் தூய்மை பணி யாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com