என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பி.யில் கல்குவாரி இடிந்து விபத்து.. ஒருவர் பலி - இடிபாடுகளுக்குள் 8 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு
    X

    உ.பி.யில் கல்குவாரி இடிந்து விபத்து.. ஒருவர் பலி - இடிபாடுகளுக்குள் 8 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு

    • மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    உத்தரபிரதேசத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.

    தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இடிபாடுகளுக்கு அடியில் ஒரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×