search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trains cancelled"

    • மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.
    • இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    கோவை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    இன்று காலை 6 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரெயில் (எண் 20644) ரத்து செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12680) ரத்தானது.

    இதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675), காலை 7.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675) ரத்து செய்யப்பட்டன.

    இதுதவிர மிச்சாங் புயல் காரணமாக கோவை வழியாக இயக்கப்படும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக கோவையில் இருந்து வருகிற 6-ந் தேதி பரௌனி புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 03358), கோட்டயத்தில் இருந்து இன்று நரசாபூர் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07120), கொல்லத்தில் இருந்து நாளை செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07130), கொச்சுவேலியில் இருந்து வருகிற 6-ந் தேதி கோரக்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்12512), திருவனந்தபுரத்தில் இருந்து இன்று புதுடெல்லி புறப்பட்டுச் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12625), புதுடெல்லியில் இருந்து நாளை மற்றும் 6-ந் தேதிகளில் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12626) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    மேலும் ஷாலிமரில் இருந்து வருகிற 6-ந் தேதி நாகர்கோவில் புறப்பட்டு வரும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12660), தன்பாத்தில் இருந்து இன்று ஆலப்புழா புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13351), ஆலப்புழாவில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் தன்பாத் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13352), செகந்திராபாத்தில் இருந்து இன்றும், நாளையும் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17230), திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 5,6,7-ந் தேதிகளில் செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17229), எர்ணாகுளத்தில் இருந்து நாளை டாடா நகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 18190) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் திப்ருகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22503) ரத்து செய்யப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து நாளை நெல்லை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22619), எர்ணாகுளத்தில் இருந்து இன்று பாட்னா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22643), பாட்னாவில் இருந்து வருகிற 7-ந் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22644), கொச்சுவேலியில் இருந்து இன்று கோர்பா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22648), கோர்பாவில் இருந்து வருகிற 6-ந் தேதி கொச்சுவேலி புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22647), பாட்னாவில் இருந்து நாளை எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22670), பிலாஸ்பூரில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22815), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22816), ஹதியாவில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22837), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி ஹதியா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22838) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வடக்கு ரெயில்வேயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
    • ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும்.

    மதுரை

    ரெயில்களை பாதுகாப்பாக இயக்க, வடக்கு ரெயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரெயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரெயில் நிலைய பிரிவில் ரெயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது.

    இதன் காரணமாக வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில் கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியா குமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை-டெல்லி நிஜா முதீன் எக்ஸ்பிரஸ் (12651), டிசம்பர் 6,

    ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திரு நெல்வேலி-ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652), டிசம்பர் 11, ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.

    இத்தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பயணிகள் கடும் அவதி
    • புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது

    அரக்கோணம்:

    சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்துக்கும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்ப ரத்துக்கும் தினமும் 500-க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆயிரக்க ணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்களின் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதன்படி, சில நாட்களுக்கு முன்பு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மொத்தமுள்ள புறநகர் மின்சார ரெயில் சேவையில் 54 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 16 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதில், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கும், பின்னர் அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அரக்கோணம், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை செல்லும் ரெயில்களில் அதிகளவு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளா கியுள்ளனர்.

    • வேலூர் மாவட்டம், திருவலம் இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.
    • கோவை மெயின் லைனில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் - வேலூர் மாவட்டம், திருவலம் இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் திருப்பூர் வழியாக சென்னை - கோவை மெயின் லைனில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 2023 ஜனவரி 3 மற்றும், 4ந் தேதி 2நாட்களும், சென்னையில் காலை 6:10 மணிக்கு புறப்பட்டு மதியம், 2:05 மணிக்கு கோவை வரும் கோவை எக்ஸ்பிரஸ், மதியம் 3:15 மணிக்கு கோவையில் புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.ஜனவரி 4ந் தேதி காலை 7:10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மதியம் 2:15 மணிக்கு கோவை வரும் சதாப்தி சூப்பர்பாஸ்ட் (12243) இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த ரெயில் விபத்தைத் தொடர்ந்து அமிர்தசரஸ், மனவாலா வழித்தடத்தில் இன்று 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #PunjabTrainAccident #TrainsCancelled
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தனர்.

    அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இடைவிடாமல் வெடித்துக்கொண்டிருந்த பட்டாசு சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பலர் ரெயிலில் அடிபட்டனர்.



    இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமிர்தசரஸ்-மனவாலா ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து  நிகழ்ந்தது.

    இந்த விபத்தை தொடர்ந்து அமிர்தசரஸ்-மனவாலா வழித்தடத்தில் செல்லக்கூடிய 8 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 ரெயில்கள்  மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 15 ரெயில்கள் அருகில் உள்ள ரெயில் நிலையங்கள் வரை இயக்கப்படுகின்றன. #AmritsarTrainAccident #PunjabTrainAccident #Dussehra #TrainsCancelled
    ×