search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிச்சாங் புயல் எதிரொலி: கோவை-சென்னை இடையே இன்று ரெயில்கள் ரத்து
    X

    மிச்சாங் புயல் எதிரொலி: கோவை-சென்னை இடையே இன்று ரெயில்கள் ரத்து

    • மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.
    • இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    கோவை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக கோவையில் இருந்து இன்று சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    இன்று காலை 6 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரெயில் (எண் 20644) ரத்து செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12680) ரத்தானது.

    இதேபோல சென்னையில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675), காலை 7.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (எண் 12675) ரத்து செய்யப்பட்டன.

    இதுதவிர மிச்சாங் புயல் காரணமாக கோவை வழியாக இயக்கப்படும் 23 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக கோவையில் இருந்து வருகிற 6-ந் தேதி பரௌனி புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 03358), கோட்டயத்தில் இருந்து இன்று நரசாபூர் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07120), கொல்லத்தில் இருந்து நாளை செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரெயில் (எண் 07130), கொச்சுவேலியில் இருந்து வருகிற 6-ந் தேதி கோரக்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்12512), திருவனந்தபுரத்தில் இருந்து இன்று புதுடெல்லி புறப்பட்டுச் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12625), புதுடெல்லியில் இருந்து நாளை மற்றும் 6-ந் தேதிகளில் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12626) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    மேலும் ஷாலிமரில் இருந்து வருகிற 6-ந் தேதி நாகர்கோவில் புறப்பட்டு வரும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12660), தன்பாத்தில் இருந்து இன்று ஆலப்புழா புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13351), ஆலப்புழாவில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் தன்பாத் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 13352), செகந்திராபாத்தில் இருந்து இன்றும், நாளையும் திருவனந்தபுரம் புறப்பட்டு வரும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17230), திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 5,6,7-ந் தேதிகளில் செகந்திராபாத் புறப்பட்டுச் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 17229), எர்ணாகுளத்தில் இருந்து நாளை டாடா நகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 18190) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6,7-ந் தேதிகளில் திப்ருகர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22503) ரத்து செய்யப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து நாளை நெல்லை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22619), எர்ணாகுளத்தில் இருந்து இன்று பாட்னா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22643), பாட்னாவில் இருந்து வருகிற 7-ந் தேதி எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22644), கொச்சுவேலியில் இருந்து இன்று கோர்பா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22648), கோர்பாவில் இருந்து வருகிற 6-ந் தேதி கொச்சுவேலி புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22647), பாட்னாவில் இருந்து நாளை எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22670), பிலாஸ்பூரில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22815), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22816), ஹதியாவில் இருந்து இன்று எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22837), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 6-ந் தேதி ஹதியா புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22838) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×