மாடியில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

மாலிக் சலீம் கட்டிடத்தின் 2-வது மாடியில் கட்டுமான பணி செய்து கொண்டிரு ந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்த மாலிக் சலீமை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி
Published on

ஈரோடு:

பீகார் மாநிலத்தை சேர்ந்த அப்துல்லா மகன் மாலிக் சலீம் (24). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் வணிக வளாக கட்டிடப் பணியில் ஒப்பந்த முறையில் தொழிலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த மாலிக் சலீம் கட்டிடத்தின் 2-வது மாடியில் கட்டுமான பணி செய்து கொண்டிரு ந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த மாலிக் சலீமை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலிக் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்து மாலிக்கின் உடல் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு எடுத்து செல்லப்பட்டது. இறந்து போன மாலிக் சலீமிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com