என் மலர்
நீங்கள் தேடியது "after being hit by a jeep"
- ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.
- விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோடு, நொச்சிப்பாளையம் பிரிவு சர்வீஸ் ரோட்டில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவயி டத்திற்கு வந்து பார்த்த போது இறந்து கிடந்தது சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில நபர் என்பதும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என தெரியவில்லை.
அதேபோல் அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகா லை 5 மணியளவில் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு அந்த வாலிபர் சர்வீஸ் ரோட்டிற்கு வந்து இறந்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய ஜீப் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.