என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பஸ்சில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி
- உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
- கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கோத்தகிரி,
மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் சம்யூரி இஸ்லாம் (வயது40) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குன்னூரில் இருந்து கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் பணி செய்வ தற்காக அரசு பஸ்சில் சென்றார். பின்னர் அவர் இறங்கும் இடம் வந்தவுடன் பஸ்சில் இருந்து இறங்குவதற்க்காக ஓடும் பஸ்சின் படிக்கட்டு பகுதியில் வந்து நின்றார். அப்போது எதிர்பாராமல் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. காயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மேல் சிகைச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவருடன் பணியாற்றிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.