முருங்கை மரத்தை வெட்டிய போதுமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முருங்கை மரத்தை வெட்டிய போதுமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

ேகாவை,

கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 32). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டின் அருேக உள்ள முருங்கை மரத்தை வெட்டினார். அப்போது முருங்கை மரம் அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார வயர் மீது விழுந்தது. இதனை பார்க்காமல் ஹரிதாஸ் மரத்தை பிடித்து இழுத்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் உடல் கருகிய அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய ஹரிதாசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஹரிதாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com