என் மலர்
நீங்கள் தேடியது "கால அட்டவணை"
- பயணிகள் ரயிலை, நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க கேட்டுக்கொள்கிறோம்.
- நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜனவரி 1ம் தேதி முதல் அமலாக இருக்கும் ரெயில்வேயின் புதிய கால அட்டவணைக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.
இந்திய ரெயில்வே நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் ரெயில்களின் கால அட்டவணையை பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நிர்வாக மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமல்படுத்தி வருகிறது.
01 ஜனவரி 2025 அன்று முதல் புதிய அட்டவணை செயல்பட்டு வருவதை தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்கான ரெயில் அட்டவணை ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது. அதற்காக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ரெயில்வே நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளார்.
பயணிகள் ரெயில்கள் இணைப்பு மற்றும் நீட்டிப்பு:
56305/56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் ரயில் மற்றும் 56708/56707 திருநெல்வேலி – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து திருநெல்வேலி – நாகர்கோவில் டவுன் (NJT) வழியாக – திருவனந்தபுரம் வடக்கு எனும் ஒரே பயணிகள் ரயிலாக இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லது 56306/56309 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் ரயிலை, நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க கேட்டுக்கொள்கிறோம்.
புதிய நேர அட்டவணை அலுவலகப் பயணிகளுக்குத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட வேண்டும்.
திருநெல்வேலி – நாகர்கோவில் டவுன் – திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – திருநெல்வேலி மற்றும் மாற்று திசையில் சர்குலர் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது காலை நேரத்தில் 66305/66306 கொல்லம் – கன்னியாகுமரி மற்றும் 56705/56706 புனலூர் – கன்னியாகுமரி எனும் இரண்டு பயணிகள் ரயில்கள் கன்னியாகுமரிக்கு. செல்கின்றன. ஆனால் நாகர்கோவில் – திருநெல்வேலி வழித்தடத்தில் பகல் நேர பயணிகள் ரயில் இல்லை எனவே, இவற்றில் ஏதாவது ஒன்றை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 16347/16348 மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலை, நாகர்கோவில் வரை நீட்டிக்கவும் கேட்டுக்கொள்கிறோம். தற்போது மங்களூரு மற்றும் வடகேரளா நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கான இரவு ரயில்கள் கிடைப்பதில்லை, எனவே இந்நீட்டிப்பு பயணிகளுக்கு பெரிதும் உதவும்.
நேர அட்டவணை மாற்றங்கள்:
66305/66306 கொல்லம் – கன்னியாகுமரி MEMU ரயிலின் ஓய்வு நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து இருந்து செவ்வாய் அல்லது புதன்கிழமை என மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது வார இறுதியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
17235/17236 நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு காலை 06:00 – 07:00 மணிக்குள் சென்றடையவும், மற்றும் அங்கிருந்து புறப்படும் நேரம் 18:00 மணிக்கு மாற்றப்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தை இரவு 22:00 மணி என முன்னேற்றி, நாகர்கோவில் வருகை காலை 10:00 மணிக்குள் வருமாறு பரிந்துரைக்கிறோம்.
22667/22668 கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தை நாகர்கோவிலில் இரவு 20:30 மணிக்கு முன்னேற்றி, கோயம்புத்தூரில் காலை விரைவில் வருமாறு மாற்ற பரிந்துரைக்கிறோம்.
16339/16340 நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரித்து மக்கள் பயன்படும் விதத்தில் தாமதமாக புறப்பட்டு முன்னதாக வந்தடையும் வகையில் நேரம் திருத்துவதின் மூலம் நாகர்கோவில் நிலையத்தில் நீண்ட நேரம் நிற்கும் வண்டிகள் குறைந்து, நிலைய நெரிசல் குறையும்.
மேலும் 16649/16650 கன்னியாகுமரி – மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை உயர்த்தி, கன்னியாகுமரியில் இருந்து காலை 05:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 20:30 மணிக்குள் திரும்பி வருமாறு நேரம் மாற்ற பரிந்துரைக்கிறோம். இது பயணிகளின் வசதிக்கும் இயக்கத்திறனுக்கும் உதவும்.
20635/20636 சென்னை எக்மோர் – கொல்லம் ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் டவுன் நிலையத்தில் 5 நிமிடம், மற்றும் குளித்துறை நிலையத்தில் 3 நிமிடம் என இரு திசைகளிலும் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுத்தங்கள் தொடர்பான வேண்டுகோள்கள்:
22627/22628 இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏரணியல் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
19577/19578 திருநெல்வேலி – ஜாம்நகர் இருவாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் 16335/16336 நாகர்கோவில் – காந்திதாம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குளித்துறை நிலையத்தில் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முனைய மாற்றங்கள் மற்றும் நாகர்கோவில் நெரிசல் குறைப்பு:
22657/22658 நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், 12667/12668 நாகர்கோவில் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ், மற்றும் 12689/12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் ரேக்குகள் நாகர்கோவிலில் நீண்ட நேரம் நிற்பதால் நிலைய நெரிசல் ஏற்படுகிறது.
எனவே இவற்றை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது ரேக் பயன்பாட்டை மேம்படுத்தி, நாகர்கோவில் முனைய நெரிசலை குறைக்கும்.
அது போன்று 16353/16354 நாகர்கோவில் – காசேகுடா எக்ஸ்பிரஸ் ரயிலின் ரேக்குகள் பல நாட்கள் நாகர்கோவிலில் நிற்கின்றன. இதை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை நீட்டிக்கவும், மேலும், 16331/16332 திருவனந்தபுரம் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலுடன் ரேக் பகிர்வு (rake sharing) நடைமுறைப்படுத்தி, அதன் இயக்க நாள்களை மறுசீரமைக்கவும் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் ரேக் பயன்பாடு மேம்பட்டு, நாகர்கோவில் நிலைய நெரிசல் குறையும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் வசந்த் எம்.பி. ரெயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்தல்
- சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
நாகர்கோவில் :
விஜய் வசந்த் எம்.பி. தென்னக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணிக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு அன்று நள்ளிரவு வேளாங்கண்ணி சென்றடைகிறது. அதே ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்தடைகிறது. ஆகையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையை மாற்றி சனிக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும், ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை நாகர்கோவில் வந்தடையும் வகையிலும் நேர அட்டவணையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல் மதுரை-புனலூர் ரெயில் ஆரல்வாய்மொழி, பள்ளியாடி, குழித்துறை மேற்கு போன்ற நிலையங்களில் நிறுத்தம் வேண்டும். நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் நாகர்கோவில் டவுண், பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
- ரெயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்
- தண்டவாள பணிகள் முடிக்க பட்டதால் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
திருப்பூர்:
கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ெரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என,ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாலக்காடு ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ெரயில் நிலையம் இடையே, தண்டவாள பணிகள் நடப்பதால், பாலக்காடு - திருச்சி (16844), திருச்சி - பாலக்காடு (16843) உள்ளிட்ட 2 ெரயில்களின் சேவை, ஜூலை 20-ந் தேதி முதல் 25ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்கள் அட்டவணை மாற்றம்.
- பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்களின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்கள் 08.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், வரும் 08.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதவாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






