search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cable"

    • தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றியை அகற்றி தரைவழி மின் கேபிள்கள் பதிக்க வேண்டும்.
    • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு தினமும் ஆயிரகணக்கானோர் வருகின்றனர்.இந்த தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றியை அகற்றி தரைவழி மின் கேபிள் பதிப்பதற்காக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன,

    இந்த நிலையில் அதன் சாத்தியகூறுகளை கண்டறிய ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நாகூர் தர்கா வருகை புரிந்து அந்த பகுதிகளை பார்வையிட்டார்.

    அவருடன் நாகை நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார், தமிழக அரசு அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் முஹம்மது பைசல், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹாமாலிம் மற்றும் நாகூர் தர்கா பிரசிடன்டு கலீபா சாஹிப் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வால் விரைவில் தர்காவை சுற்றி தரைவழி மின் கேபிள் பணி தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

    • பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
    • வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    அங்கேரிபாளையம் மின்சார வாரியம் சாா்பில் புதைவட கேபிள் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  திருப்பூா் மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் ஜீவா காலனி நுழைவு வாயில் அருகில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    இந்த நிலையில், மின்சார வாரியம் சாா்பில் அப்பகுதியில் பழுதடைந்துள்ள புதைவட கேபிள்களை சீரமைக்கும் பணி இன்று தொடங்கி குறுகிய காலத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, பணி நடைபெறும்போது பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்

    • சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • சீரமைக்கும் வரை அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்சேவைமென்பொருளை பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளன.

    மேலும் கேபிள் ஆப்ரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு தற்காலிக தீர்வுகாணப்பட்டு வருகிறது. மேற்படி பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மேற்படி தற்காலிக பிரச்சனையை சீரமைக்கும் வரை அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளதாக ஐகோர்ட்டில் டிராய் தகவல் தெரிவித்துள்ளது. #cabletv

    சென்னை:

    டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18-ந் தேதி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பாணை வெளியிட்டது.

    சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் முழுமையாக செட்டாப் பாக்சுக்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் டிராய்யின் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்த மாதம், அதாவது ஜனவரி 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் ஆஜரான வக்கீல் விளக்கம் அளித்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் இந்த வழக்கிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, டிராய் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #cabletv

    ×