என் மலர்

  நீங்கள் தேடியது "TV"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி ஒளிபரப்பாகிறது.
  • 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு.

  திருப்பூர் :

  ஆதிமூல சற்குரு ஸ்ரீ வீரபோக வசந்தராயர் மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் நாளை 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அனைவரும் இதனை பார்த்து சுவாமிகளின் திருவருளையும் அம்பாளின் பேரருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. என மூன்று சேவைகளுக்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #RelianceJio  ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

  ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் அதிகபட்சம் 40 சாதனங்களை ஸ்மார்ட் ஹோம் நெட்வொர்க்கில் ரூ.1,000 கட்டணத்தில் இணைக்க முடியும் என கூறப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.

  தற்சமயம் இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது. இதனை பயன்படுத்த பயனர்கள் ரூ.4,500 எனும் ஒருமுறை பாதுகாப்பு கட்டணமாக செலுத்த வேண்டும்.  ஜியோ ஜிகாஃபைபர் சேவை தற்சமயம் பிரீவியூ சலுகையாக வழங்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு மாதம் 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபருடன் பிராட்பேண்ட்-லேண்ட்லைன்-டி.வி. என மூன்று சேவைகளை ரூ.600 கட்டணத்தில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 600 தொலைகாட்சி சேனல்கள் மற்றும் 100Mbps வேகத்தில் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜியோ ஜிகாஃபைபர் பயன்படுத்துவோருக்கு லேண்ட்லைன் மற்றும் தொலைகாட்சி சேவைகள் அடுத்த மூன்று மாதங்களில் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  காம்போ சேவைகளை இயக்க ரிலையன்ஸ் ஜியோ ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் ரவுட்டரை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரவுட்டர் கொண்டு 40 முதல் 45 சாதனங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டி.வி.க்கள், லேப்டாப்கள் மற்றும் கனெக்ட்டெட் சாதனங்களை இணைக்க முடியும் என கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் ரூ.153 மாத கட்டணத்தில் 100 சேனல்களை தேர்வு செய்யலாம். #TRAI  மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண சேனல்களை ரூ.153.40 கட்டணத்திற்கு பார்க்க முடியும்.

  புதிய கட்டணம் மாதம் ரூ.130 என்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.

  டிராய் அறிவிப்பில் ஹெச்.டி. சேனல்கள் இடம்பெறாது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேனல்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் கட்டணம் செட் டாப் பாக்ஸ் மூலம் நேரடியாகவே காண்பிக்கப்படும்.  புதிய கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் 011-23237922 (ஏ.கே. பரத்வாஜ்) மற்றும் 011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது advbcs-2@trai.gov.in, arvind@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.

  மேலும் தனியே சேனல் ஒன்றுக்கான கட்டணம் மாதம் அதிகபட்சம் ரூ.19 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். முதல் முறையாக வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பார்த்துரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலை தனியாகவோ அல்லது ஒன்றிணைந்த நோக்கில் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். 

  இவ்வாறு வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை அவரவர் விருப்பப்படி தனியாகவோ அல்லது குழு அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் என எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். சேனல்களின் கட்டண விவரங்களை சேவை நிறுவனங்கள் 999 என்ற பிரத்யேக சேனலில் வழங்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைப்பு மூலம் விலை குறைக்கப்பட்ட டி.வி., கம்ப்யூட்டர், கேமரா உள்பட 23 பொருட்களை இன்று முதல் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். #GST
  புதுடெல்லி:

  டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

  அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், டி.வி., கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் உள்பட 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.

  அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள் ஆடம்பர பொருட்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள், சிமெண்ட், பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டி, ஏ.சி., பாத்திரம் கழுவும் எந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


  பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

  மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

  ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

  32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

  இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

  இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. #GST
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளதாக ஐகோர்ட்டில் டிராய் தகவல் தெரிவித்துள்ளது. #cabletv

  சென்னை:

  டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18-ந் தேதி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பாணை வெளியிட்டது.

  சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் முழுமையாக செட்டாப் பாக்சுக்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் டிராய்யின் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ந்தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்த மாதம், அதாவது ஜனவரி 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் ஆஜரான வக்கீல் விளக்கம் அளித்தார்.

  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் இந்த வழக்கிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, டிராய் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #cabletv

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்.ஜி. நிறுவனம் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளும் வகையிலான தொலைகாட்சி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LG #TV  எல்.ஜி. நிறுவனம் பெரிய திரை கொண்ட புதிய டி.வி. மாடல்களை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

  புதிய டி.வி. மாடலில் 65 இன்ச் அளவில் சுருட்டக்கூடிய திரை கொண்டிருக்கும் என்றும், இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டனை க்ளிக் செய்ததும் திரை கீழ் இருந்து மேலே எழும்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் OLED ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், படங்கள் அதிக துல்லியமாக தெரியும் என்றும் இவை வழக்கமான எல்.சி.டி. ஸ்கிரீன்களை விட எளிமையாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது.  எல்.ஜி. நிறுவனத்தின் சுருட்டக் கூடிய தொலைகாட்சி மாடல்கள் அந்நிறுவனத்திற்கு விற்பனை அளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீன நிறுவங்களுடனான போட்டியை எதிர்கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.

  சீயோல் நகரில் உள்ள எல்.ஜி. ஆராய்ச்சி மையத்தில் சுருட்டக்கூடிய டி.வி.யின் ப்ரோடோடைப் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பயன்படுத்தாத போது, பெட்டியில் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.  எல்.ஜி. தனது சுருட்டக் கூடிய டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்தது. எனினும், 2019 வாக்கில் வர்த்தக ரீதியில் இந்த டி.வி. மாடல்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து எல்.ஜி. சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

  சமீபத்தில் வெளியான தகவல்களின் படி தொலைகாட்சி சந்தையில் OLED ரக பேனல்களை கொண்ட டி.வி. மாடல்கள் வெறும் 1.1 சதவிகிதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது என தெரியவந்துள்ளது. எல்.சி.டி. ரக டி.வி.க்கள் சந்தையில் 98 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் OLED  டி.வி. மாடல்களின் விநியோகம் 70 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. #PakistanSC
  இஸ்லாமாபாத்:

  இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சகிப் நிசார் முன்னிலையில் நடைபெற்றது.

  வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியாவின் சேனல்களுக்கு தடை விதித்தால் என்ன? என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக, 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் ரேடியோ மற்றும் சேனல்களில் இந்திய நிகழ்ச்சிகள், படங்களுக்கு தடை விதித்து இருந்ததும், அந்த தடை 2017-ம் ஆண்டு விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. #PakistanSC
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவுதி அரேபியாவில் முதன் முறையாக செய்தி வாசிப்பாளர் பணிக்கு பெண் நியமிக்கப்பட்டதற்கு, பெண்கள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #SaudiArabia
  ஜெட்டா:

  சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் வரவேற்ப்பை பெற்றன. 

  இந்நிலையில், அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.

  அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் விஷன் 2030 என்ற பெயரில் இளவரசர் மேலும் பல புரட்சிக்கரமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பார் என்றும் சவுதி பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் இந்தியா நிறுவனம் உலகின் முதல் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Samsung #LED  உலகின் முதல் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீனை சாம்சங் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவ் எல்.இ.டி. என்றும் அழைக்கக் கூடிய ஸ்கிரீன் வீட்டு பயன்பாடுகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முதல் எல்.இ.டி. ஆகும்.

  வீட்டினுள் பொழுதுபோக்கு இடைவெளியை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டும் இந்த எல்.இ.டி. வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த வீடியோ அனுபவத்தை வழங்கும்.  சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கும், தலைசிறந்த ஆடியோ மற்றும் வீடியோ தரவுகளை சூப்பர் பிரீமியம் திரையில் பார்க்க விரும்புவோரை குறிவைத்து புதிய எல்.இ.டி. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திரையால் மிகவும் நுணுக்கமான வீடியோ தரத்தை துல்லியமாக வழங்க முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது. 

  மெல்லிய வடிவமைப்பில் மாட்யூலர் ஃபார்மேஷன் தொழில்நுட்பம் மூலம் பொருத்தக்கூடிய வகையில், பயனர்கள் விரும்பும் படி ஸ்கிரீன் அளவை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர் விரும்பும் படி திரையை எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம்.

  ஹெச்.டி.ஆர். பிக்சர் ரிஃபைன்மென்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் திரையில் வீடியோ பார்க்க நேரில் பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும் என்றும் காட்சிகள் மிகத்துல்லியமாக தெரியும். திரையை சுற்றி நிலவும் வெளிச்சங்களால் காட்சியில் எவ்வித இடையூறும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சீரிஸ்-இல் 110-இன்ச் FHD, 130-இன்ச் FHD, 220-இன்ச் UHD மற்றும் 260-இன்ச் UHD அளவுகளில் கிடைக்கிறது. இந்த திரை 1,00,000-க்கும் அதிக மணி நேரங்கள் உழைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் சாம்சங் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீன் அளவுகளுக்கு ஏற்ப விலை ரூ.1 கோடியில் துவங்கி அதிகபட்சம் ரூ.3.5 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீண்ட நேரம் டி.வி., கணினியின் நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
  நாம் பெரும்பாலும் கணினியில் பணி செய்கிறோம், டி.வி.யில் பொழுது போக்குகிறோம். அல்லது ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுகிறோம். எல்லாவிதமான எலக்ட்ரானிக் கருவிகளின் திரைக் காட்சிகளும் நீல நிற ஒளியை உமிழ்கின்றன. இருட்டில் இந்த நீல ஒளியை நேரடியாக பார்க்கலாம். நீண்ட நேரம் இந்த நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள டோலிடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியளார்கள் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆய்வின் பயனாக, எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளி கருவிழியை பாதிப்பதோடு, அதன் லென்ஸ் பகுதியை நிறங்களை எதிரொளிக்க முடியாமல் செய்துவிடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

  பொதுவாக நமது விழித்திரையே ஒளியை உணரும் பகுதியாக உள்ளது. இதுவே காட்சி தகவல்களை மூளைக்கு கடத்தி காட்சியைக் காணவும் துணை செய்கிறது. விழித்திரை செல்கள் தொடர்ந்து ஒளி சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பினால்தான் நம்மால் காட்சிகளை காண முடியும். விழித்திரை இல்லாமல் அதனுடன் தொடர்புடைய ஏற்பி செல்கள் இணைந்து செயல்படாது.

  எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது ஏற்பி செல்களை அழியச் செய்வதோடு, சில வேதிப்பொருட்களை சுரந்து விழித்திரையை பாதிப்படையச் செய்கின்றன. இந்த ஏற்பி செல்கள் மறுபடியும் உற்பத்தி ஆகாத செல்கள் என்பதால் ஒருமுறை இழந்தால் பார்வையை இழந்ததற்கு சமம்தான்.

  வழக்கமாக வயதாகும்போது இந்த ஏற்பி செல்கள் மெதுவாக அழிந்து கொண்டே வருவதுதான், முதியவர்களின் பார்வை குறைபாட்டிற்கு காரணமாகும். எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது வயது மூப்பு செயலைவிட வேகமாக ஏற்பி செல்களை அழித்துவிடுகிறது. ஆனால் இந்த பாதிப்பு உடனடியாக நிகழ்வதில்லை. தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் கணினி பார்க்கும் பழக்கமுடையவர்களுக்கே விரைவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

  அதிர்ஷ்டவசமாக நீல ஒளியைப்போல வேறு நிறங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற ஒளியலைகள் விழிசெல்களை இவ்வளவு தீவிரமாக பாதிக்கவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சி கணினி மற்றும் டி.வி. ஒளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். இருந்தாலும் செல்போன்களும், டேப்லட்களும் இதே வகையில் பாதிப்பை உருவாக்கும் என்றே அவர்கள் கருது கிறார்கள். அது பற்றிய ஆராய்ச்சியைத் தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

  இந்த பாதிப்புகளில் இருந்து கண்களைக் காத்துக் கொள்ள ஆராய்ச்சியாளர்கள் 2 எளிய வழிகளையும் சொல்கிறார்கள். முதலாவது வழி குறைந்த வெளிச்சத்தில் எலக்ட்ரானிக் திரைகளை பார்க்காமல் இருப்பது. அதாவது பகல் வெளிச்சத்தில் இந்த கருவிகளை பார்ப்பதால் அவ்வளவு தீவிரமாக கண்கள் பாதிப்படையாது என்கிறார்கள். இரண்டாவதாக ‘வைட்டமின்-இ’ உருவாக்கும் ஒருவகை நோய் எதிர்பொருளான ஆல்பா டோகோபெரல் இந்த செல்கள் பாதிப்படைவதை கட்டுப்படுத்தும். எனவே ‘வைட்டமின்-இ’ நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இவ்விரு வழிகளில் நீலநிற ஒளியில் இருந்து கண்களை காப்பாற்றலாம்! 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி :

  மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

  17 உள்ளூர் வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து, ஓராண்டில், 384 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. 68 வகையான சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

  அதிகபட்ச வரியான 28 சதவீத வரி, இன்று படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. அந்த வரிவரம்பில், சொகுசு பொருட்களும், புகையிலை, சிகரெட், பான் மசாலா போன்ற பாவ பொருட்களுமே பெரும் பாலும் இருக்கின்றன. அதை தவிர்த்து பார்த்தால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. உள்ளிட்ட ஒருசில பொருட்கள்தான் இருக்கின்றன.

  இந்த பொருட்களால் வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், இவற்றின் மீதான ஜி.எஸ்.டி.யும் கூடிய விரைவில், 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படும். அதன்பிறகு, சொகுசு பொருட்களும், பாவ பொருட்களும் மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி. வளையத்துக்குள் இருக்கும். அதன்மூலம், ‘காங்கிரசின் பரம்பரை வரி’க்கு முடிவுரை எழுதப்படும்.  ஏனென்றால், ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களுக்கு 31 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது.

  கட்டுமான பொருட்களில், சிமெண்டைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்துக்கும் வரி குறைக்கப்பட்டு விட்டது. அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் களுக்கு செலவு குறைவதுடன், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பொருட்களை கொள்முதல் செய்ய இதுவே சிறந்த தருணம் ஆகும்.

  ஜி.எஸ்.டி. குறைப்பால், அரசுக்கு ரூ.70 ஆயிரம் கோடி நிகர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்வதாக மாநில அரசுகளுக்கு உறுதி அளித்துள்ளோம். எனவே, இந்த சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

  இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். 
  ×