என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அருகே  வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ்பார்மர்- சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
    X

    வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ்பார்மர்.

    தென்காசி அருகே வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ்பார்மர்- சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை

    • திரவியநகர் கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் தென்னை மரம் ஒன்று அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மேல் விழுந்தது
    • வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ் பார்மர் சரி செய்யப்படாமல் உள்ளது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள திரவியநகர் கிராமத்தில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வீசிய பலத்த சூறைக்காற்றில் தென்னை மரம் ஒன்று அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மேல் விழுந்தது.

    மேலும் இதில் டிரான்ஸ் பார்மர் உட்பட 3 மின் கம்பங்கள் சாய்ந்தன.அப்போது மத்தாளம் பாறை மின்சார அலுவலகத்தில் புகார் செய்ததை அடுத்து ஒரு மாதம் கழித்து மூன்று மின்கம்பங்கள் புதிதாக மாற்றி தற்காலிக இனணப்பு கொடுத்திருந்தனர்.

    ஆனால் அதன் பிறகு இது வரை வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ் பார்மர் சரி செய்யப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொது மக்கள் பல முறை தொடர் கொண்டு புகார் அளித்தும் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள 10 கிணறுகளில் தண்ணீர் இருந்தும் சரியான முறையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே மின்சாரத் துறை யினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    Next Story
    ×