search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college bus"

    கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்த இடத்தில் ஜல்லிகளை கொண்டு பள்ளத்தை மூடிவிட்டனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த சாலையில் தனியார் கல்லூரி பஸ் இன்று காலை சென்றது. அப்போது, கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

    இதையடுத்து அவ்வழியே சென்றவர்களின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பஸ்சினை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். இந்த சாலை குறுகிய சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ராமநாதபுரம் அருகே கல்லூரி பஸ் மோதி டிரைவர் பலியானார்.
    • இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மங்களேஸ்வரி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது40), டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கீழக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் வந்த தனியார் கல்லூரி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கணேசன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் சர்மிளா என்ற இளம்பெண் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    • மகளிர் கல்லூரி பஸ்சில் பெண் ஒருவரை டிரைவராக நியமித்திருப்பது மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    நவீன இந்த உலகத்தில் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். அடுப்படியில் கிடந்த நிலை மாறி, அத்துபடி என்ற நிலை உருவாகிவிட்டது. அதிலும் சிலர் தங்கள் விரும்பிய துறையில் அசாத்தியமாக சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக சாலையில் ஓடும் கார் தொடங்கி ஆகாயத்தில் பறக்கும் விமானம் வரை இன்று பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது.

    தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் சில இடங்களில் பெண்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பஸ் ஓட்டுகிறார்கள். சமீபத்தில் கோவையில் சர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    அதுபோல் சேலத்திலும் முதல் முறையாக இளம்பெண் ஒருவர் மகளிர் கல்லூரி பஸ் டிரைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். முதல் கல்லூரி பஸ் ஓட்டுனராக திகழ்ந்து வருகிறார்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கல்வி பயில வரும் மாணவிகளுக்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது நாள் வரை இந்த கல்லூரி பஸ்ஸை ஆண் டிரைவர்களே இயக்கி வந்தார்கள்.

    பெண்கள் மட்டுமே படிக்கும் இந்த கல்லூரியில் தற்போது ஓமலூர் முத்து நாயகன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் தமிழ்செல்வி (வயது 28), என்பவரை, கல்லூரி நிர்வாகம் டிரைவாக நியமித்துள்ளது. இவருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    மகளிர் கல்லூரி பஸ்சில் பெண் ஒருவரை டிரைவராக நியமித்திருப்பது மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழ்ச்செல்வி, கல்லூரி பஸ்சை தினமும் காலை, மாலையில் இயக்கி வருகிறார்.

    இது குறித்து தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    எனது தந்தை மணி, லாரி ஓட்டுநராக பணியாற்றி, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது. இது பற்றி நான், அப்பாவிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு லாரியை எப்படி ஓட்ட வேண்டும் என கற்று தந்தார். இதனால் நான் லாரி ஓட்டுவதை எளிதாக கற்றுக்கொண்டேன்.

    நான் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களின் அனைத்து பகுதிகளுக்கும் லாரியில் பல்வேறு லோடுகளை ஏற்றிச் சென்று வந்துள்ளேன். தற்பொழுது எனது 4 வயது குழந்தையை நாள்தோறும் தனது கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக உள்ளூரில் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்ற வந்துள்ளேன். டிரைவர் பணிக்கு பெண் ஒருவரை நியமித்து கல்லூரி நிர்வாகம் வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதன் மூலம் எனது வெகுநாள் கனவு நிறைவேறி உள்ளது.

    டிரைவர் என்பது ஒரு தொழில் தான். டிரைவர்களுக்கு உண்டான மரியாதை அனைவரும் தர வேண்டும். பெண்களுக்கு பெண்கள் தான் பாதுகாப்பு என்பதை உணர்த்தும் வகையில் மகளிர் கல்லூரி பஸ் டிரைவர் பணியினை நான் நேசித்து பணியில் சேர்ந்து உள்ளேன். பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கலாம். மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெண்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.

    மகளிர் கல்லூரியில் பெண் ஒருவர் டிரைவர் பணியில் சேர்ந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. அவருக்கு பாராட்டு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    • சிதம்பரத்தில் கடத்தப்பட்ட தனியார் கல்லூரி பஸ் மீட்பு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பாஸ்கரன் என்பவர் கடந்த சனிக்கிழமை கல்லூரி பஸ்சை சிதம்பரத்தில் நிறுத்தி இருந்தார். இன்று காலை வழக்கம்போல் பஸ்சை எடுப்பதற்கு பாஸ்கரன் சென்றார்.

    கடலூர்:

    புதுவையை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் வழக்கம் போல் மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்வதற்காக சிதம்பரம் செல்வது வழக்கம். அதன்படி கல்லூரி பஸ் டிரைவர் சிதம்பரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த சனிக்கிழமை கல்லூரி பஸ்சை சிதம்பரத்தில் நிறுத்தி இருந்தார். இன்று காலை வழக்கம்போல் பஸ்சை எடுப்பதற்கு பாஸ்கரன் சென்றார். அப்போது நிறுத்தியிருந்த இடத்தில் பஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசாரும், கல்லூரி ஊழியர்களும் பஸ்சை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் அருகே எஸ்.என்.சாவடி பகுதியில் கல்லூரி பஸ் நிற்பதாக கல்லூரி ஊழியர்கள் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக புதுநகர் போலீசார் விரைந்து சென்று பஸ்சை மீட்டு சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த பஸ்சை கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்த பெரியசாமி, நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் இந்த பஸ்சை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும்.

    ×