என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukkottai youth murder"

    • மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகன் முருகேசன் (வயது 25), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று இரவு மழையூர் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், தலை, தோள்பட்டை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே முருகேசன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மழையூரில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் முருகேசன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முருகேசன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே கோரம் பகுதியை சேர்ந்தவர் பாலேந்திரன் மகன் அருண் (வயது 21). இவரது மைத்துனர் ஊரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் பார்த்தீபன் (22).

    நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும் இருவரும் நண்பர்கள் போல் பழகி வந்துள்ளனர். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வதுண்டு. மேலும் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    தினமும் மாலை, இரவு நேரங்களில் ஊரின் அருகே உள்ள ஆலமரத்தின் அடியில் இருந்து மது அருந்துவதோடு, சிறிது நேரம் மரத்தடியில் அமர்ந்து பேசிவிட்டு பின்னர் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அதே போல் நேற்று இரவு 10 மணியளவில் இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    அப்போது ஆத்திரமடைந்த பார்த்தீபன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து, அருணின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அருணை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அருண் இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தீபனை கைது செய்தனர். கொலை செய்யும் அளவு அவர்களுக்குள் நடந்த பிரச்சினை என்ன? காதல் பிரச்சினையால் அருண் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×