search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prayers"

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம்
    • ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.


    கடலூர்:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று விருத்தாசலம் ஆலடி ரோட்டில் அமைந்துள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து உற்சாகத்துடன் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .

    • பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்

    அரியலூர்:

    முஸ்லிம்களின் தியாக திருநாளாக போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் நகர ஜூம்மா பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து தொழுகையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

    தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை, ஒருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். முஸ்லிம் சிறுவர்-சிறுமிகளும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பிறகு முஸ்லிம்கள் ஆடு, மாடுகளின் இறைச்சிகளை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியாக கொடுத்து மகிழ்ந்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி கீழப்பழூவூர், வெங்கனூர், திருமானூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், விக்கிரமங்கலம், செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு, ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் பாஜக தலைவர் அமித் ஷா பிரதமர் மோடியின் வெற்றிக்காக துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். #AmitShah #VictoryofModi #Siddagangamutt
    பெங்களூரு:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கர்நாடக மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தவனேகரே பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூடாநட்பாக கூட்டணி அமைத்து மாநிலத்தின் ஆட்சியை அபகரித்துக் கொண்டனர்’ என தெரிவித்தார்.



    தனது பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக துமக்கூருவில் மாபெரும் பேரணி நடத்திய அமித் ஷா இங்குள்ள சித்தகங்கா மடத்துக்கு சென்றார். பிரதமர் மோடியின் வெற்றிக்காக துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் அவர்  சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். #AmitShah #VictoryofModi  #Siddagangamutt  
    இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SCissuesnotice #Muslimwomen #mosqueentry
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தம்பதியர் இஸ்லாமிய பெண்களும் மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    மத்திய-மாநில அரசின் நிதியுதவி மற்றும் சில சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிகளில் பாலின பாகுபாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என தங்களது மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மசூதிகளுக்குள் பெண்கள் வழிபாடு செய்ய கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள தடையால் பெண்களின் சமஉரிமையும், கண்ணியமும் கேள்விக்குள்ளாவதாக குறிப்பிட்டார்.

    அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு ‘அரசியலமைப்பு சட்டம் 14-வது பிரிவின்படி ஒரு நாட்டிடம் கோர வேண்டிய உரிமையை தனிநபர்கள் (மசூதி நிர்வாகம்) மீது திணிக்க முடியுமா?, வேறு எந்த நாட்டிலாவது இஸ்லாமிய பெண்கள் மசூதிகளுக்குள் தொழுகை நடத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளதா?  என்று கேள்வி எழுப்பினர்.



    இதற்கு பதிலளித்த மனுதாரரின் வழக்கறிஞர் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் கனடா நாட்டில் உள்ள பல மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி உண்டு என தெரிவித்தார்.

    இதனையடுத்து, மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு? என்ன என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முன்னர் சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    (சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என முன்னர் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விளக்கம் கேட்டிருந்தது.

    அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கோர்ட் எடுக்கும் முடிவுக்கு அரசு கட்டுப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருந்தனர். ஒரு நீதிபதி மட்டும் எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

    ஆனால், பெரும்பான்மையான நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது.

    பின்னர், மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த பலர் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றை நடத்தினர். மேலும், இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் இருமுடியுடன் வந்த பல பெண்களை மிரட்டி, திருப்பி அனுப்பி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.)

    இப்படி, சபரிமலை தீர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மதிப்பில்லாமல் போனதை இன்று சூசகமாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘முன்னர் சபரிமலை தீர்ப்பு விவகாரம்போல் இந்த வழக்கின் தீர்ப்பும் ஆகிவிடாமல் இருப்பதற்காகவே மத்திய அரசிடம் முன்கூட்டியே விளக்கம் கேட்கப்படுவதாக’ தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SCissuesnotice #Muslimwomen #mosqueentry 
    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால் தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். #TajMahal

    ஆக்ரா:

    உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமின்றி தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்துவார்கள்.

    மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 6 நாட்களும் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாடு முஸ்லிம்களும் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவது தெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் இது குறித்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு, வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்தது.

    இந்த சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், “தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை நேற்று முதல் தொல்லியல் துறையினர் தொடங்கி உள்ளனர்.

    நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    வழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி விட்டனர். தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.

    வெளி ஊர்களில் இருந்து தாஜ்மகாலுக்கு வந்திருந்த முஸ்லிம் சுற்றுலா பயணிகளுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. தொல்லியல் துறை நடவடிக்கைக்கு இமாம் சையது சாதிக் அலி, தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் சையது இப்ராகிம் உசைன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்க வில்லை. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதாக கூறியுள்ளனர். #TajMahal 

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார். RamNathKovind #prayatbrahmatemple
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் வந்தடைந்தார். இதையடுத்து, இன்று ஹெலிகாப்டர் மூலம், அஜ்மீர் நகரில் உள்ள புஷ்கர் பகுதிக்கு சென்ற குடியரசுத்தலைவர், அங்குள்ள பிரசித்திப் பெற்ற பிரம்மா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    அதைத்தொடர்ந்து, இன்று அஜ்மீர் நகரில் உள்ள தர்காவுக்கும் அவர் சென்று வழிபாடு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathKovind #prayatbrahmatemple
    நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தார். #Modi #PashupatinathTemple
    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜனக்புரியில் உள்ள சீதை கோயிலில் வழிபாடு செய்தார். இன்று காலை மஸ்ட்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சென்ற அவர் புத்த - இந்து மத சம்பிரதாயங்களின்படி முக்திநாதரை வணங்கினார்.



    பிற்பகல் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி, காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.

    நேபாளம் முன்னாள் பிரதமர் புஷ்பா கமால் தஹால் பிரச்சாந்தா-வை அவர் சந்தித்து பேசினார். காத்மாண்டு மாநகராட்சி சார்பில் இன்று மாலை அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் இன்றிரவு டெல்லி திரும்புகிறார். #Modi #PashupatinathTemple
    நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று காலை புகழ்மிக்க முக்திநாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். #ModiVisitNepal #ModiPrayersMuktinath
    காத்மாண்டு:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று நேபாளம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜனக்பூர் சென்றடைந்த அவர், ஜனக்பூர் விமான நிலையத்தில் இருந்து ஜானகி கோவிலுக்கு சென்றார். அப்போது அவரை நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின்னர் ஜனக்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



    இந்நிலையில், இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தில் இன்று காலை புகழ்பெற்ற முக்திநாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அமர்ந்து சிறிது நேரம் பிரார்த்தனையும் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் மோடி சந்தித்து பேசினார். மோடியின் வருகையையொட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    அதன்பின்னர் காத்மாண்டு திரும்பும் மோடி, பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார். இதையடுத்து பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். #ModiVisitNepal #ModiPrayersMuktinath
    ஜனக மன்னரின் மகளும் ராமரின் மனைவியுமான சீதை பிறந்த ஜனகபுரியில் உள்ள ஆலயத்தில் இன்று வழிபாடு செய்ததன் மூலம் நெடுநாள் ஆசை நிறைவேறியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modiofferprayers #JanakpurSitatemple
    காத்மாண்டு:

    மிதிலை மன்னனான ஜனகர், குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை பூமாதேவியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

    ஜனகபுரி (இன்றைய பீகார் என்கிறார்கள்) மன்னன் ஜனகராஜா. இவர் மகள் சீதை. இதிகாசப்படி இவருடைய பிறப்பு மிதிலை நகரில் இருந்துள்ளது. அந்த மிதிலை நகர்தான் பீகாரின் சீதாபுரி மாவட்டமாக இன்றும் சீதை நினைவாக போற்றப்படுகிறது.

    அதேவேளையில், நேபாளம் நாட்டில் உள்ளவர்கள் அங்குள்ள ஜனகபுரியில் சீதை பிறந்ததாகவும், இங்குதான் சுயம்வரத்தின்போது ராமர் - சீதைக்கு திருமணம் நடந்ததாகவும் நம்புகின்றனர்.

    இந்நிலையில், நேபாள நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஜனகபுரி நகரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகருக்கு நேரடி பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.



    அங்குள்ள சீதை ஆலயத்தில் இன்று வழிபாடு செய்த மோடி, இந்த பயணத்தின்போது இங்கு வழிபாடு செய்ததன் மூலம் தனது நெடுநாள் ஆசை நிறைவேறியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modiofferprayers #JanakpurSitatemple

    ×