என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பாராட்டு
    X

    சங்கத் தலைவர் பொன்முருகேசன் பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார்.

    சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பாராட்டு

    • 2022-2023-ம் ஆண்டு பொதுமக்களிடம் சிறந்த சேவை புரிந்தமைக்காக சங்க பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • நடப்பு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என உறுதி எடுக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாவட்ட, மாநில அளவில் சிறந்த சங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மாநில அளவில் சிறந்த கடன் சங்க செயல்பட்டு மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான கேடயத்தை கூட்டுறவு அமைச்சர் வழங்கினார்.

    இந்நிலையில் 2022-2023-ம் ஆண்டு கடன் வழங்கல், வைப்புத் தொகை பெறுதல் மற்றும் பொதுமக்களிடம் சிறந்த சேவை புரிந்தமைக்காக சங்க பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் மற்றும் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்முருகேசன் தலைமை தாங்கி சங்க செயலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் கவுரவித்து பரிசு மற்றும் இனிப்பு வழங்கினார். சங்க மேலாளர் சுடலைமுத்து வரவேற்றார். இதில் நடப்பு ஆண்டும் சிறப்பாக செயல்பட்டு மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என உறுதி எடுத்தனர். இதில் சங்க பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலர் எட்வின் தேவாசீர்வாதம் நன்றி கூறினார்.

    Next Story
    ×