தி.மு.க. பொதுக்கூட்டம்

கமுதி அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொதுக்கூட்டம்
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராம லிங்கம் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவிஅய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர்கள் தங்கமணி, மாரிமுத்து ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர்.

தலைமை கழக பேச்சாளர் நல்ல சேதுபதி பேசினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ்,அவைத் தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் விநாயக மூர்த்தி, பிரதிநிதி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com