என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power bank"

    • பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது.
    • விமானம் பறக்கும் போது அவற்றை எலக்ட்ரானிக் சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது.

    இனி விமானப் பயணத்தின் போது பயணிகள் பவர் பேங்குகளைப் பயன்படுத்தக் கூடாது என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் DGCA அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லலாம், ஆனால் விமானத்திற்குள் அதைப் பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை.

    லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள் விமானத்தின் உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது. அவற்றை பயணிகள் தங்கள் கையோடு வைத்திருக்கும் கேபின் பேக்குகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

    விமானம் பறக்கும் போது அவற்றை எலக்ட்ரானிக் சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், விமானப் பாதுகாப்பு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது.
    • பாதுகாப்பு கருதி பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது.

    சிங்கப்பூர்:

    தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அந்த விமானம் பயன்படுத்தாத முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இதனையடுத்து விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்து ஏர் பூசன் நிறுவனம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தைவானின் ஈவா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த உத்தரவை அமல்படுத்தியது.

    அந்தவரிசையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி 100 வாட் திறன் வரை கொண்ட பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களுடன் கொண்டு செல்லும் கைப்பையில் அதனை கொண்டு செல்லக்கூடாது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    ×