என் மலர்
நீங்கள் தேடியது "Paramilitary forces"
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் நடவடிக்கை.
- டெல்லி ஜமா மமூதி முன்பாக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.
இதைதொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்பிறகு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், டெல்லி ஜமா மமூதி முன்பாக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.
துணை ராணுவப்படையினர் லத்தி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி சாலை வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (துணை ராணுவம்) மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. அதாவது விடுமுறைக்கு செல்லும்போதும், பணிக்கு திரும்பும் போதும் ஜம்மு-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-டெல்லி இடையே வர்த்தக விமானங்களில் இருவழி போக்குவரத்தை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான உரிமத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். பின்னர் அந்த கட்டணத்தை தங்கள் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுமார் 7.8 லட்சம் வீரர்கள் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. #PulwamaAttack #AirTravel #JammuKashmir
புதுவை கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்து வரும் தர்ணா போராட்டத்தால் புதுவையில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
இதனையொட்டி, சென்னை ஆவடி மற்றும் அரக்கோணம் பகுதியில் இருந்து 4 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதில், ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று (வியாழக்கிழமை) காலை 6.40 மணியளவில் டிஜிபி அலுவலகம் வந்தனர். இதில், 128 துணை ராணுவ படை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் கவர்னர் மாளிகை, சட்டமன்றம் மற்றும் கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீதமுள்ள 3 கம்பெனி துணை ராணுவத்தினர் கோரிமேடு போலீஸ் மைதானம் வந்துள்ளனர். அவர்களும் நகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். #Narayanasamy #GovernorKiranbedi






