என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டிகை நாட்கள்"

    • எந்தவொரு அதிகார அமைப்புக்கும் விமானக் கட்டணங்களையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ ஆய்வு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை.
    • அத்தியாவசிய சேவைத் துறையில் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையை உயர்த்த விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிப்பது நியாயமற்றது.

    பண்டிகைக் காலங்களில் பன்மடங்கு விமான கட்டணங்கள் உயர்த்தப்படுவதன் மூலம் பயணிகள் 'சுரண்டப்படுவதாக' உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நிச்சயமாக நீதிமன்றம் தலையிடும் என்றும் தெரிவித்துள்ளது. 

    தொடர்ந்து தனியார் விமான நிறுவனங்களால் விதிக்கப்படும் விமானக் கட்டண ஏற்ற இறக்கங்கள் மற்றும் இதர கூடுதல் கட்டணங்களைக் கட்டுப்படுத்த, பிணைப்புடன் கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

    மத்திய அரசின் சார்பில் பதிலளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் கௌஷிக் கால அவகாசம் கோரியதை அடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு (2026) நீதிமன்றம் ஒத்திவைத்தது . 

    சிவில் விமான போக்குவரத்து துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கக் கோரி கடந்த மாதம் சமூக ஆர்வலர் எஸ். லட்சுமிநாராயணன் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், 

    "எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, தனியார் விமான நிறுவனங்கள் எகானமி வகுப்பு (Economy class) பயணிகளுக்கான இலவச செக்-இன் லக்கேஜ் அளவை 25 கிலோவிலிருந்து 15 கிலோவாகக் குறைத்துள்ளன என்றும், இதன் மூலம் 'முன்பு டிக்கெட் சேவையின் ஒரு பகுதியாக இருந்த ஒரு விஷயத்தை தற்போது புதிய வருவாய் ஈட்டும் வழியாக மாற்றியுள்ளன'. என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், செக்-இன் லக்கேஜ் வசதியைப் பயன்படுத்தாத பயணிகளுக்கு எந்தவிதமான தள்ளுபடி, இழப்பீடு அல்லது சலுகைகள் வழங்கப்படாதது, இம்முறையின் 'தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான தன்மையை' காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 



    தற்போது எந்தவொரு அதிகார அமைப்புக்கும் விமானக் கட்டணங்களையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ ஆய்வு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை. இது மறைமுகக் கட்டணங்கள் மற்றும் கணிக்க முடியாத விலை நிர்ணயம் மூலம் நுகர்வோரை சுரண்ட விமான நிறுவனங்களுக்கு வழிவகுக்கிறது.

    தன்னிச்சையான கட்டண உயர்வு, ஒருதலைப்பட்சமாக சேவைகளைக் குறைத்தல் மற்றும் தரைமட்டத்தில் குறைகளைத் தீர்க்கும் வசதி இல்லாமை போன்ற ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற இத்தகைய நடைமுறைகள், குடிமக்களின் சமத்துவம், தடையற்ற நடமாட்டம் மற்றும் கண்ணியமான வாழ்வு ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். 

    ஒழுங்குமுறைப் பாதுகாப்புகள் இல்லாததால், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் அல்லது வானிலை மாற்றங்களினால் ஏற்படும் இடையூறுகளின் போது கட்டணங்கள் மிகக் கடுமையாக உயர்கின்றன. இது ஏழைகளையும் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களையும் பெருமளவில் பாதிக்கிறது. வசதி படைத்த பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிகிறது; ஆனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் பெரும்பாலும் உச்சக்கட்ட விலையேற்றத்தின் போது அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். 

    விமானக் கட்டணங்களை நிர்ணயிக்கும் கணினி வழிமுறைகள், ரத்து செய்யும் கொள்கைகள், சேவைகளின் தொடர்ச்சி மற்றும் குறைதீர்க்கும் வழிமுறைகளை முறைப்படுத்துவதில் அரசு காட்டும் மெத்தனம், அரசியலமைப்பு ரீதியிலான கடமையைத் தவறுவதற்கு சமமாகும். இதில் நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு அவசியம். 

    மேலும், அத்தியாவசிய சேவைத் துறையில் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையை உயர்த்த விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிப்பது நியாயமற்றது. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையில், அவசர காலப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை நியாயமான மற்றும் சுரண்டலற்ற முறையில் பெறுவதும் அடங்கும். விமானப் பயணம் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி ஒரு தேவையாக மாறும் அவசர காலங்களில், தன்னிச்சையான கட்டண உயர்வுகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குடிமக்களின் இந்த உரிமையைப் பறிக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார். 

    முன்னதாக இது தொடர்பாக மத்திய அரசு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    • வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது அனைவரின் வழக்கமாகும்.
    • ஒளிவீசும் இவ்வகை விளக்குகள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

    புதிதாக வீசு கட்டும்போதும், பண்டிகை மற்றும் விஷேச நாட்களிலும் வீட்டை அலங்கரிக்க வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது அனைவரின் வழக்கமாகும். ஒளிவீசும் இவ்வகை விளக்குகள் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இத்தகைய மின்விளக்குகள் அமைக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

    புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு:

    ஹாலின் நடுவில் தங்க நிற விளக்கும். ஹாலின் மூலைப் பகுதிகளில் நீலம், பிங்க், ஊதா என சுவரின் வண்ணத்திற்கு ஏற்ற வகையிலும் மின்விளக்குகளை அமைக்கலாம். படுக்கை அறையில் வெளிர் சில்வர். சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிற விளக்குகளை அமைக்கலாம். பால்கனி மற்றும் வீட்டின் முன்புறம் மஞ்சள். நீலம் அல்லது வெளிர் பச்சை நிற விளக்குகளை அமைக்கலாம்.

    வீட்டின் முன்புறம் மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு குடுவை வடிவ விளக்குகளையும், படுக்கை அறைக்கு தரையுடன் ஒட்டி இருக்கும்படியான மின்மினிப்பூச்சிகள் போல காட்சி அளிக்கும் ஓயர் வடிவ விளக்குகளையும், பால்கனி அல்லது மாடிப்பகுதிக்கு சிறிய வடிவில் இருக்கும் போக்கஸ் வகை மின்விளக்கையும் தேர்ந்தெடுக்கலாம்.

    பண்டிகை காலங்களில்:

    பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். விட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும். பால்கனிக்கு சில்வர் நிற விளக்குகளையும். வீட்டின் திரை, ஜன்னல் மற்றும் மாடிப்படிகளுக்கு ஊதா மற்றும் வெளிர் பிங்க நிற விளக்குகளையும், படுக்கை அறைக்கு மங்கிய மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிற விளக்குகளையும் அமைக்கலாம்.

    ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தங்க நிற விலக்கையும், பிறந்த நாள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு நீலம், சிவப்பு மற்றும் பச்சை என கலவையான நிற விளக்குகளையும், வாழ்த்து சொல்லும் நிகழ்வுகளுக்கு ஊதா மற்றும் சில்வர் நிற விளக்குகளையும் அமைக்கலாம். ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஏற்றபடி மின்விளக்கு வடிவங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

    பிறந்தநாள், திருமண நாள் போன்ற வாழ்த்துக்களை பகிரும் நிகழ்வுகளுக்கு செயின் விளக்குகளையும் ஆள்மிக நிகழ்வுகளுக்கு குறைந்தபட்சம் 2 அடி அளவில் இருக்கும் நிளமான விளக்குகளையும், பாரம்பரியம் சார்ந்த பண்டிகை நாட்களுக்கு கிளிப் வடிவிலான எல்.இ.டி. விளக்குகளையும் அமைக்கலாம்.

    குழத்தைகள் இருக்கும் வீட்டில் தனித்தனியாக வயரில் இணைக்கப்பட்டிருக்கும் சீரியல் மின்விளக்குகளுக்கு பதிலாக தொடர்சியாக ஒரு பைப்பிற்குள் மூடி இருக்கும்படியான ரோப் மின்விளக்குகளை பயன்படுத்தலாம். கண்ணாடி மற்றும் பைபர் கிளாஸ் மூலம் கிளிப் மின்விளக்குகள் பாதுகாப்பானவை. அது மட்டுமில்லாமல் இவற்றில் தண்ணீர் பட்டாலும் மின்கசிவு ஏற்படாது.

    • நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது.
    • இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள்.

    நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது. காரசாரமான உணவுகளை விட நாவிற்கு தித்திப்பூட்டும் இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள். தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நாட்டின் மற்ற பகுதியில் வசிப்பவர்களும் சுவைக்க தூண்டும் அளவிற்கு ருசி மிகுந்தவை. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

    கொழுக்கட்டை:

    அரிசி மாவு, வெல்லம், தேங்காய் கலந்து நீராவில் வேகவைக்கப்படும் இது அனைத்து தரப்பினரும் விரும்பும் இனிப்பு பலகாரமாக உள்ளது. கொழுக்கட்டையில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பு மட்டுமின்றி காரமாகவும் இதனை தயார் செய்து ருசிக்கலாம்.

    மைசூர் பாக்:

    கர்நாடக மாநிலம் மைசூருவில் தயாராகும் இது அதன் பெயரையும் தாங்கி நிற்கிறது. உளுந்தம் பருப்பு, நெய், சர்க்கரை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது நாவில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மையுடையது. கர்நாடகா மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் அறிந்திருக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அரசர் காலத்தில் இருந்தே அதன் தரம், ருசி மாறாமல் இன்றளவும் சுவைக்கப்படுகிறது.

    உன்னியப்பம்:

    கேரளாவில் பிரபலமான இனிப்பு வகையாக விளங்குகிறது. அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லம், வறுத்த எள், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இது ஒவ்வொரு வீடுகளிலும் ருசிக்கப்படும் சிற்றுண்டியாக விளங்குகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பரிமாறப்படும் இனிப்பு வகையாக கருதப்படுகிறது.

    ஒப்பாட்டு:

    கர்நாடகாவில் தயாரிக்கப்படும் இது பூரான் போளி என்றும் அழைக்கப்படுகிறது. கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் போன்றவற்றின் கலவையில் இது உருவாகிறது. போளி வகையிலேயே மாறுபட்ட சுவை கொண்டது. இதனை இனிப்பு பிரெட் என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் திரு விழாக்கள், வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளின்போது இது பரிமாறப்படுகிறது.

    ஜாங்கிரி:

    உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை இது. அதனை நன்றாக வறுத்து பொடித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது. மெல்லிய இழைகளாக அச்சுக்களில் வார்க்கப்படும் இது ஆரஞ்சு நிற சாயலில் காட்சி அளிக்கும். தித்திக்கும் இனிப்பு பண்டங்களை விரும்புபவர்கள் ஜாங்கிரியை தவிர்க்கமாட்டார்கள்.

    கடலை மிட்டாய்:

    தமிழ்நாட்டின் பிரபலமான தின்பண்டமாக விளங்கும் கடலை மிட்டாய், வறுத்த வேர்க் கடலை, வெல்லம் சேர்த்து செய்யப்படுகிறது. மொறுமொறுப்பான, மிதமான இனிப்பு சுவை கொண்டது.

    கேசரி:

    ரவை, நெய், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையை குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ருசிப்பார்கள்.

    பூதரெகுலு:

    ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இது, அரிசி மாவு, நெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படுகிறது. காகித இழை போல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உலர் பழங்களும் சேர்க்கப்படும். உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால் இது சத்தான இனிப்பு பொருளாக அறியப்படுகிறது.

    ×