ஏசி கோச்சை காணவில்லை: அதிர்ச்சி அடைந்த பயணிகள்

சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. முன்பதிவு செய்த ஏசி கோச் இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏசி கோச்சை காணவில்லை: அதிர்ச்சி அடைந்த பயணிகள்
Published on

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் நான்டேட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட தயாராக பிளாட்பார்ம் வந்தடைந்தது.

அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏசி கோச் ஒன்று இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது குழப்பம் நிலவியது.

இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையை அடைந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட 3 அடுக்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்த 57 பயணிகளுக்கு அவர்களின் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட BE2 ஏசி கோச்சை ரெயிலில் இணைக்க முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகளை ரெயிலில் காலியாக உள்ள மற்ற பெர்த்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்க வைத்தனர் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com