அரசு பஸ் பின்பக்க டயரில் புகை- நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
அரசு பஸ் பின்பக்க டயரில் புகை- நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்
Published on

புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராம பஸ் நிறுத்தத்தில் சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் இலவச பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென பின்பக்க படிக்கட்டின் கீழ் உள்ள டயரில் இருந்து அதிக அளவில் புகையும் துர்நாற்றமும் ஏற்பட்டதால் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

பஸ் டயர் தேய்மானம் ஆகி உள்ளே உள்ள டியூப் ஆகியவை சூடு ஏறி புகை வந்துள்ளது என தெரிகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு பயணிகள் பழுது இல்லா பஸ்சை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com