என் மலர்
கால்பந்து
- உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
- இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இதனையடுத்து அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இது ஸ்கை ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 46,000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்டேடியம் தொடர்பான திட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வீழ்த்தியது.
- ரியல் மாட்ரிட் அணியில்ன் கைலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.
லா லிகா லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தியது.
ரியல் மாட்ரிட் அணி சார்பில் கைலியன் எம்பாப்பே ஒரு கோலும், பெல்லிங்காம் ஒரு கோலும் அடித்தார். பார்சிலோனா அணிக்காக லோபஸ் ஒரு கோல் அடித்தார்.
- மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
- மெஸ்சி நவம்பர் 17-ந் தேதி கொச்சிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையே காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ந் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- 212 நாடுகளில் இருந்து ரசிகர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்கள்.
- இந்த மாத தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பமானது.
மியாமி:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். 3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 25 நாடுகள் என இதுவரை 28 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 20 நாடுகள் தகுதி பெற வேண்டும்.
இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானதாக பிபா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பமானது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் போட்டி நடைபெற இருப்பதால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் டிக்கெட் வாங்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. 212 நாடுகளில் இருந்து ரசிகர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்கள். இருந்தும் 48-இல் 28 திடல்களில் மட்டுமே நிரம்பி இருப்பதாக பிபா தெரிவித்துள்ளது.
டிக்கெட் வாங்கும் நாடுகளில் டாப் 10 நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜென்டீனா, பிரான்ஸ் என்ற வரிசையில் இருக்கின்றன
இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலைகள் ரூ.8.38 லட்சம் முதல் ரூ.50.57 லட்சம் வரை என 3 விதங்களில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
- இங்கிலாந்து அணி 17-வது முறையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளது.
- ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா 7-வது தடவையாகவும், கத்தார் 2-வது முறையாகவும் தகுதி பெற்றுள்ளன.
ரிகா (லாத்வியா):
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய 6 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கண்டங்களான குரூப் 'கே' பிரிவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-லாத்வியா அணிகள் மோதின. லாத்வியாவில் உள்ள ரிகா நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 18 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
இங்கிலாந்து அணி 17-வது முறையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளது. தொடர்ச்சியாக 8-வது தடவையாக தகுதி பெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து தகுதி பெற்ற முதல் அணி இங்கிலாந்து ஆகும்.
ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா 7-வது தடவையாகவும், கத்தார் 2-வது முறையாகவும் தகுதி பெற்றுள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய 3 நாடுகளும் 4-வது தடவையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளன.
3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 25 நாடுகள் என இதுவரை 28 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 20 நாடுகள் தகுதி பெற வேண்டும்.
- ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார்.
- மேட்ரிட் மக்கள் இன்னும் ரொனால்டோவை மறக்கவில்லை.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரூ.94 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது இது உலக சாதனை தொகையாக இருந்தது.
2018-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். அவரை அந்த அணி ரூ.100 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார்.
ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார். இது அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார் என அந்த அணி நட்சத்திர வீரர் எம்பாப்வே புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கால்பந்து ஜாம்வான் ரொனால்டோ, தற்போது சவுதியின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இருந்தாலும் இன்றும் ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார். மேட்ரிட் மக்கள் இன்னும் ரொனால்டோவை மறக்கவில்லை.
என்று அவர் கூறினார்.
எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணியில் 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேப்வெர்டே முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
- ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலக கோப்பை போட்டிக்கு இதுவரை 6 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
பிரையா:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும். போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா,கானா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் 22-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேப்வெர்டே நாடு தகுதி பெற்றது.
நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி எஸ்வதினியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் குரூப் டி பிரிவில் கேப்வெர்டே 23 புள்ளிகளை பெற்று உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக கேமரூன் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
கேப்வெர்டே முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலக கோப்பை போட்டிக்கு இதுவரை 6 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
- நார்வே 5-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை ஊதித்தள்ளியது.
- நார்வே அணியில் எர்லிங் ஹாலண்ட் (27-வது, 63-வது மற்றும் 72-வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.
ஆஸ்லோ:
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். இதுவரை 17 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
தகுதி சுற்று போட்டிகள் தற்போது கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய மண்டலத்துக்கான தகுதி சுற்றில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த 'ஐ' பிரிவு ஆட்டம் ஒன்றில் நார்வே அணி, இஸ்ரேலை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் களம் புகுந்த நார்வே 5-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை ஊதித்தள்ளியது.
நார்வே அணியில் எர்லிங் ஹாலண்ட் (27-வது, 63-வது மற்றும் 72-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். இதையும் சேர்த்து அவரது கோல் எண்ணிக்கை 51-ஆக (46 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிவேகமாக 50 கோல் அடித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஹாரி கேனிடம் (71 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.
'எப்' பிரிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் ரூபன் நெவ்ஸ் கடைசி நிமிடத்தில் பந்தை தலையால் முட்டி கோல் அடித்து வெற்றியை தேடித்தந்தார். முன்னதாக 75-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தவறவிட்டார்.
- மெஸ்ஸி இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
- அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
மெஸ்ஸி இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். நவம்பர் மாதத்தில் கேரளா வரும் அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை தோரயமாக ரூ.3500 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி இந்தியாவிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் வெனிசுலாவுக்கு எதிராக நடந்த சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்க அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
- அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது.
போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது. சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது லாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிற வணிக முயற்சிகளால் இத்தகைய பெருமையை அவர் அடைந்துள்ளார்.
இந்த விஷயத்தில் அவர் லயோனல் மெஸ்ஸி போன்ற பிற கால்பந்து ஜாம்பவான்களை மிஞ்சியுள்ளார். இதனால் அவர் விளையாட்டின் முதல் பில்லியனரானார். பிரேசிலிய கால்பந்து வீரரான ரொனால்டோ நாசாரியோவின் (R9 என அழைக்கப்படுபவர்) 2025 ஆம் ஆண்டு வரை அவரது நிகர மதிப்பு சுமார் $160 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
- நாளை பிரதமர் மோடியின் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.
நாளை பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
- மொராக்கோ தகுதி பெற்ற நிலையில், 2ஆவது ஆப்பிரிக்க நாடாக தகுதி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் 18-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி பெற்றது. ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் துனிசியா, ஈக்வடோரியல் கினியா அணிகள் மோதின. மலாபோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் முகமது பென் ரோம்தானே இந்த கோலை அடித்தார். இதன்மூலம் 'எச்' பிரிவில் 22 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தது. துனிசியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1978, 1998, 2002, 2006, 2018, 2022 ஆகிய உலக கோப்பையில் விளையாடி இருந்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வான 2-வது ஆப்பிரிக்க நாடு துனிசியாவாகும். மொராக்கோ பிறகு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.






