என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2026 உலக கோப்பை கால்பந்து"

    • இங்கிலாந்து அணி 17-வது முறையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளது.
    • ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா 7-வது தடவையாகவும், கத்தார் 2-வது முறையாகவும் தகுதி பெற்றுள்ளன.

    ரிகா (லாத்வியா):

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    இந்த நிலையில் இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய 6 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

    ஐரோப்பிய கண்டங்களான குரூப் 'கே' பிரிவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-லாத்வியா அணிகள் மோதின. லாத்வியாவில் உள்ள ரிகா நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 18 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    இங்கிலாந்து அணி 17-வது முறையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளது. தொடர்ச்சியாக 8-வது தடவையாக தகுதி பெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து தகுதி பெற்ற முதல் அணி இங்கிலாந்து ஆகும்.

    ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா 7-வது தடவையாகவும், கத்தார் 2-வது முறையாகவும் தகுதி பெற்றுள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய 3 நாடுகளும் 4-வது தடவையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளன.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 25 நாடுகள் என இதுவரை 28 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 20 நாடுகள் தகுதி பெற வேண்டும்.

    • ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
    • இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன.

    நியூயார்க்:

    ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 1930-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை.

    இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியை ஆசிய கண்டத்தில் உள்ள கத்தார் இந்த ஆண்டு நடத்துகிறது. நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கால்பந்து சம்மேனம் இன்று அறிவித்தது.

    அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கிறது. முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியை 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது.

    அமெரிக்காவில் 11 நகரங்களிலும், மெக்சிகோவில் 3 நகரங்களிலும், கனடாவில் 2 நகரங்களிலும் போட்டி நடக்கிறது.

    அமெரிக்காவில் போட்டி நடைபெறும் நகரங்கள் வருமாறு:-

    நியூயார்க் அல்லது நியூஜெர்சி, லாஸ்ஏஞ்சல்ஸ், டல்லாஸ், கனாஸ்சிட்டி, ஹூஸ்டன், அட்லாண்டா, பில்டெல்பியா, சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், மியாமி, சியாட்டில்.

    மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ சிட்டி, மான்ட்டெரி, குதலஜாரா ஆகிய இடங்களிலும், கனடாவில் வான்கூவர், டொரண்டோ ஆகிய நகரங்களிலும் நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா 2-வது முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு நடந்தது. இதேபோல் மெக்சிகோவில் 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்று இருந்தது.

    2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்றுகின்றன. 16 நாடுகள் கூடுதலாக கலந்து கொள்கின்றன.

    ×