என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கால்பந்து உலக கோப்பை தொடருக்குப் பின் ஓய்வு பெறுகிறார் ரொனால்டோ
    X

    கால்பந்து உலக கோப்பை தொடருக்குப் பின் ஓய்வு பெறுகிறார் ரொனால்டோ

    • கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன்.
    • அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன்.

    2026 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வுபெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியோனோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'வரும் 2026ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்போது எனக்கு 41 வயதாகி இருக்கும். அதுதான் எனது கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும். அதற்கு பின், அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக ஆட மாட்டேன். கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    தற்போது, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை ரொனால்டோவின் ஆறாவது உலகக் கோப்பை போட்டியாகும்.

    ரொனால்டோ இதுவரை நாட்டுக்காகவும், கிளப் அணியாகவும் 950-க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார்.

    Next Story
    ×