என் மலர்tooltip icon

    கால்பந்து

    உலக கோப்பை கால்பந்துக்கு 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை- லட்சத்தில் ஒரு டிக்கெட் விலை
    X

    உலக கோப்பை கால்பந்துக்கு 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை- லட்சத்தில் ஒரு டிக்கெட் விலை

    • 212 நாடுகளில் இருந்து ரசிகர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்கள்.
    • இந்த மாத தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பமானது.

    மியாமி:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். 3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 25 நாடுகள் என இதுவரை 28 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 20 நாடுகள் தகுதி பெற வேண்டும்.

    இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானதாக பிபா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பமானது.

    அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் போட்டி நடைபெற இருப்பதால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் டிக்கெட் வாங்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. 212 நாடுகளில் இருந்து ரசிகர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்கள். இருந்தும் 48-இல் 28 திடல்களில் மட்டுமே நிரம்பி இருப்பதாக பிபா தெரிவித்துள்ளது.

    டிக்கெட் வாங்கும் நாடுகளில் டாப் 10 நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜென்டீனா, பிரான்ஸ் என்ற வரிசையில் இருக்கின்றன

    இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலைகள் ரூ.8.38 லட்சம் முதல் ரூ.50.57 லட்சம் வரை என 3 விதங்களில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

    Next Story
    ×