என் மலர்
கால்பந்து
- ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார்.
- மேட்ரிட் மக்கள் இன்னும் ரொனால்டோவை மறக்கவில்லை.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரூ.94 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது இது உலக சாதனை தொகையாக இருந்தது.
2018-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். அவரை அந்த அணி ரூ.100 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார்.
ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார். இது அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார் என அந்த அணி நட்சத்திர வீரர் எம்பாப்வே புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கால்பந்து ஜாம்வான் ரொனால்டோ, தற்போது சவுதியின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இருந்தாலும் இன்றும் ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார். மேட்ரிட் மக்கள் இன்னும் ரொனால்டோவை மறக்கவில்லை.
என்று அவர் கூறினார்.
எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணியில் 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேப்வெர்டே முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
- ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலக கோப்பை போட்டிக்கு இதுவரை 6 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
பிரையா:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும். போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா,கானா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் 22-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேப்வெர்டே நாடு தகுதி பெற்றது.
நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி எஸ்வதினியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் குரூப் டி பிரிவில் கேப்வெர்டே 23 புள்ளிகளை பெற்று உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக கேமரூன் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
கேப்வெர்டே முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலக கோப்பை போட்டிக்கு இதுவரை 6 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
- நார்வே 5-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை ஊதித்தள்ளியது.
- நார்வே அணியில் எர்லிங் ஹாலண்ட் (27-வது, 63-வது மற்றும் 72-வது நிமிடம்) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.
ஆஸ்லோ:
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். இதுவரை 17 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
தகுதி சுற்று போட்டிகள் தற்போது கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய மண்டலத்துக்கான தகுதி சுற்றில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த 'ஐ' பிரிவு ஆட்டம் ஒன்றில் நார்வே அணி, இஸ்ரேலை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் களம் புகுந்த நார்வே 5-0 என்ற கோல் கணக்கில் இஸ்ரேலை ஊதித்தள்ளியது.
நார்வே அணியில் எர்லிங் ஹாலண்ட் (27-வது, 63-வது மற்றும் 72-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். இதையும் சேர்த்து அவரது கோல் எண்ணிக்கை 51-ஆக (46 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிவேகமாக 50 கோல் அடித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்தின் ஹாரி கேனிடம் (71 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.
'எப்' பிரிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணியின் ரூபன் நெவ்ஸ் கடைசி நிமிடத்தில் பந்தை தலையால் முட்டி கோல் அடித்து வெற்றியை தேடித்தந்தார். முன்னதாக 75-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தவறவிட்டார்.
- மெஸ்ஸி இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
- அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
மெஸ்ஸி இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். நவம்பர் மாதத்தில் கேரளா வரும் அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை தோரயமாக ரூ.3500 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி இந்தியாவிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் வெனிசுலாவுக்கு எதிராக நடந்த சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்க அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
- அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது.
போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது. சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது லாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிற வணிக முயற்சிகளால் இத்தகைய பெருமையை அவர் அடைந்துள்ளார்.
இந்த விஷயத்தில் அவர் லயோனல் மெஸ்ஸி போன்ற பிற கால்பந்து ஜாம்பவான்களை மிஞ்சியுள்ளார். இதனால் அவர் விளையாட்டின் முதல் பில்லியனரானார். பிரேசிலிய கால்பந்து வீரரான ரொனால்டோ நாசாரியோவின் (R9 என அழைக்கப்படுபவர்) 2025 ஆம் ஆண்டு வரை அவரது நிகர மதிப்பு சுமார் $160 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
- நாளை பிரதமர் மோடியின் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.
நாளை பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
- மொராக்கோ தகுதி பெற்ற நிலையில், 2ஆவது ஆப்பிரிக்க நாடாக தகுதி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் 18-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி பெற்றது. ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் துனிசியா, ஈக்வடோரியல் கினியா அணிகள் மோதின. மலாபோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் முகமது பென் ரோம்தானே இந்த கோலை அடித்தார். இதன்மூலம் 'எச்' பிரிவில் 22 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தது. துனிசியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1978, 1998, 2002, 2006, 2018, 2022 ஆகிய உலக கோப்பையில் விளையாடி இருந்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வான 2-வது ஆப்பிரிக்க நாடு துனிசியாவாகும். மொராக்கோ பிறகு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.
- சர்வதேச போட்டியில் முதன்முறையாக ஓமனை இந்தியா வீழ்த்தியுள்ளது.
- பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமன் முதல் இரண்டு மற்றும் கடைசி வாய்ப்பை நழுவவிட்டது.
CAFA Nations Cup கால்பந்து தொடர் தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் தாங்கள் இடம் பிடித்த குரூப்பில் 2ஆம் இடம் பிடித்ததால், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதனால் பொனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
மேற்கு ஆசிய நாடுகளில் அதிக தரவரிசையில் உள்ள நாட்டை முதன்முறையாக இந்தியா வீழ்த்தியுள்ளது. மேலும், சர்வதேச கால்பந்து போட்டியில் முதன்முறையாக ஓமனை வீழ்த்தியுள்ளது.
பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமன் முதல் இரண்டு வாய்ப்புகளையும் நழுவ விட்டது. அதன்பின் கடைசி வாய்ப்பை குர்ப்ரீதி சிங் சந்து சிறப்பான முறையில் தடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் லாலியான்ஜுயாலா சங்க்டே, ராகுல் பெகே, ஜிதின் எம்.எஸ். ஆகியோர் பெனால்டி ஷூட்அவுட்டில் கோல் அடித்தனர். அன்வர் அலி, உதண்டா சிங் ஆகியோர் மிஸ் செய்தனர்.
ஓமனுக்கு எதிராக இந்தியா கடந்த 2000-த்தில் இருந்து 9 முறை மோதியுள்ளது. இதில் 6 முறை தோல்வியடைந்துள்ளது. 2021 மார்ச் மாதம் இரண்டு அணிகளும் கடைசியாக மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
- லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.
- ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.
ஐரோப்பாவில் நடைபெறும் கிளப்புகள் கால்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகள் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடியது.
இதற்கிடையே இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் கால்பந்து கிளப்புகள் வீரர்களை பரிமாற்றம் செய்வதற்கான அவகாசம் முடிவடைந்தது.
அதன்படி அனைத்து கிளப்புகளும் மொத்தமாக ரூ.35 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் மொத்தம் 20 கிளப்புகள் விளையாடி வருகின்றன. இதில் லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட், நியூகேஸ்டல் உள்ளிட்ட கிளப்புகளும் வீரர்கள் மாற்றத்துக்கு பணத்தை அதிகமாக செல வழித்துள்ளன.
- போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
- கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியது.
கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், டியாகோ ஜோட்டாவுக்கு போர்ச்சுகல் அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ ஜோட்டாவின் தந்தையை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். .
- சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது.
- மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
லீக்ஸ் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி எதிர்கொண்டது.
இப்போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இப்போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் இரு அணி வீரர்களும் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சுனில் சேத்ரி கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
- பயிற்சியாளர் கேட்டுக் கொண்டதால் இந்த வருடம் நான்கு போட்டிகளில் விளையாடினார்.
இந்தியாவில் தற்போது வரை சுனில் சேத்ரியை தவிர, தரமான வீரர் கிடையாது என இந்திய கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் கலித் ஜமில் தெரிவித்துள்ளார்.
CAFA நேஷன்ஸ் கோப்பை ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேசிய முகாமில் சேத்ரி இடம் பெறவில்லை. இது அக்டோபர் மாதம் முக்கியமான ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளுக்கான தயார் படுத்துதல் தொடர். அக்டோபர் 9ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் சுனில் சேத்ரி விளையாடுவார் எனத் தெரிவித்தார்.
சுனில் சேத்ரி குறித்து தலைமை பயிற்சியாளர் கலித் ஜமில் கூறுகையில் "இந்தியாவில் சுனில் சேத்ரியைத் தவிர்த்து தரனமான (Quaity) வீரர் கிடையாது. அவர் விளயைாடுவதற்கு தயாராக இருக்கும்போது, அவரை ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது. அவருடைய அனுபவம் நமக்கு தேவை. அவர் ஒரு லெஜெண்ட். நாட்டிற்காக பலவருடங்கள் விளையாடி பங்களிப்பை கொடுத்துள்ளார்" என்றார்.
சுனில் சேத்ரி கடந்த வருடம் ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு கடந்த மார்ச் மாதம் மாலத்தீவு அணிக்கெதிராக களம் இறங்கினார். அப்போதைய தலைமை பயிற்சியாளர். மனோலோ மார்க்யூஸ் வேண்டுகோளை தொடர்ந்து அணிக்கு திரும்பினார்.
அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு கோல் அடித்துள்ளார். அந்த போட்டியில் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது. இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 0-0 என டிரா செய்தது. ஹாங்காங்கிற்கு 0-1 என தோல்வியடைந்தது. தாய்லாந்துக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் 0-2 எனத் தோல்வியடைந்தது.






