என் மலர்tooltip icon

    கால்பந்து

    கேரளா வரும் மெஸ்ஸி.. போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு
    X

    கேரளா வரும் மெஸ்ஸி.. போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு

    • மெஸ்ஸி இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
    • அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

    மெஸ்ஸி இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். நவம்பர் மாதத்தில் கேரளா வரும் அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை தோரயமாக ரூ.3500 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மெஸ்ஸி இந்தியாவிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் வெனிசுலாவுக்கு எதிராக நடந்த சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்க அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×