என் மலர்tooltip icon

    கால்பந்து

    • ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
    • இந்திய அணி தனது கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் மியான்மருடன் மோதியது.

    யாங்கோன்:

    ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

    இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. இதில் இந்திய மகளிர் அணி டி பிரிவில், மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றிருந்தது.

    இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக சமனும் (0-0), 2-வது போட்டியில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியும் (7-0) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

    இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் மியான்மருடன் விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது.

    அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் பூஜா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.

    இந்திய அணி கடந்த 2006-ம் ஆண்டு ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது. அதன்பிறகு 20 ஆண்டு கழித்து தற்போதுதான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருகை தருவதாக இருந்தது.
    • ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக அந்த அணி தெரிவித்து, வருகையை ரத்து செய்துள்ளது.

    மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறுகையில் "கேரள மாநில அரசு இந்த வருடத்தில் அர்ஜென்டினா அணி கேரளா வருவதை மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. ஸ்பான்சர்களுக்கும், அணிக்கும் இடையில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு இதில் ஒரு பகுதியாக இருக்கவில்லை.

    அக்டோபர்- நவம்பரில் கேரளாவில் விளையாட பணம் கொடுத்துள்ளோம். இது நடைபெறவில்லை என்றால் குட்பை சொல்ல வேண்டியதுதான். மற்றபடி என்ன செய்ய முடியும்?. இந்த வருடம் அவர்கள் விளையாடவில்லை, மற்றபடி எங்களுக்கு விருப்பம் இல்லை" என்றார்.

    முன்னதாக, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோஷப், காங்கிரஸ் மக்களவை எம்.பி. ஷஃபி பரம்பில் ஆகியோர் "அர்ஜென்டினா அணி கேரள மாநில அரசு மீது குற்றம்சாட்டியதால், மாநில அரசு கட்டாயம் பதில் அளிக்க வேண்டம். லட்சக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தற்போது, அர்ஜென்டினா அணி, இது தொடர்பாக விளக்கமாக தெரிவித்துவிட்டது. மாநில மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியை கொண்டு வந்து மாநில அரசு ஆதாயம் தேட முயற்சித்தது. அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர். மாநில அரசு ஒப்பந்த விதிமுறையை மீறி விட்டதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துவிட்டது" எனத் தெரிவித்தனர்.

    • டிசம்பர் 24ஆம் தேதி மும்பை வான்கடே மைதானம் வருகை தருகிறார்.
    • கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவார் எனத் தகவல்.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடிய நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மெஸ்சி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வான்கடே மைதானம் வரும் மெஸ்சி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    மெஸ்சி வருகை தொடர்பான அனைத்து விசயங்களும் இறுதி செய்யப்பட்டபின், முழு அட்டவணையை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • மூன்று பேரில் இருந்து இறுதியாக கலித் ஜமில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • முன்னாள் பயிற்சியாளரும், ஸ்லோவாகியா பயிற்சியாளரும் போட்டியில் இருந்தனர்.

    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான கலித் ஜமில், ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐ-லீக் 2017 சீசனில் ஐஸ்வால் கால்பந்து கிளப் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி (பயிற்சியாளராக) சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    48 வயதாகும் கலித் ஜமில், தற்போது ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அனைத்து இந்திய கால்பந்து பெடரேசனின் நிர்வாகக் குழு கலித் ஜமிலை தேர்வு செய்துள்ளது.

    இறுதிப் பட்டியலில் மூன்று பேரை தேர்வு செய்து வைத்திருந்தது. அதில் இரண்டு போட்டியாளர்கள் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஸ்டீப்ன் கான்ஸ்டைன் மற்றும் ஸ்லோவாகியா தேசிய அணியின் ஸ்டீபன் தர்கோவிக் ஆகியோர் ஆவார்கள்.

    கலித் ஜமித் ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இந்தியா ஆகஸ்ட் 29ஆவது தேதியில் இருந்து மத்திய ஆசிய கா்பந்து அசோசியேசன் தேசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது.

    • கிரீஸ் நாட்டில் தனது சொந்த நாயுடன் வாக்கிங் சென்றுள்ளார்.
    • அப்போது மற்றொரு நாய் கார்லஸ் பெரேஸை கடுமையாக தாக்கியுள்ளது.

    பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி அணிக்கு லோன் முறையில் சென்று விளையாடி வருகிறார்.

    கிரீஸ் நாட்டில் தனது நாயுடன் நேற்று வாக்கிங் சென்றுள்ளார். அப்போது மற்றொரு நாய் இவர் மீது கடுமையாக தாக்கியுள்ளது. அதுவும் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது.

    இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப பல வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

    • 2022ஆம் ஆண்டு லிவர்பூல் அணி ஒப்பந்தம் செய்தது.
    • 3 வருடத்திற்குப் பிறகு 75 மில்லியன் யூரோவிக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளது.

    ஜெர்மனியின் முன்னணி கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச், லிவர்பூல் அணி வீரரான லூயிஸ் டியாஸை 4 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    லூயிஸ் டியாஸ் கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்தார். 50 போட்டிகளில் 17 கோல்கள் அடித்துள்ளார். கடந்த சீசனில் லிவர்பூல் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

    இன்றிலிருந்து நான் இந்த அன்பான குடும்பத்தின் (பேயர்ன் முனிச்) ஒரு பகுதி என டியாஸ் தெரிவித்துள்ளார். டியாஸ்க்காக பேயர்ன் முனிச் 75 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் கட்டணமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது.
    • இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின.

    பாசல்:

    14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது. நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது. மரியோனா கால்டென்டி இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்து சமன் செய்தது. அலெசியா ருஸ்சோ இந்த கோலை பதிவு செய்தார்.

    ஆட்டம் முடியும் நேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. இதனால் கூடுதல் நேரமான 30 நிமிடம் கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் மேலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் சாம்பியன் யார் என்பதை நிர்ணயம் செய்வதற்காக பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது.

    இதில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ஐரோப்பிய கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

    இங்கிலாந்து தொடர்ந்து 2-வது முறையாக ஐரோப்பியன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஜெர்மனியை தோற்கடித்து கோப்பையை வென்று இருந்தது.

    • இங்கிலாந்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    • 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகின்றன.

    ஜெனீவா:

    14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின.

    போட்டியின் 33-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்காக பார்பரா போனான்சியா கோல் அடித்தார். ஆட்டம் முடியும் தருவாயில் அதாவது 96-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை மிச்செல் அகேமாங் பதில் கோல் அடித்து சமன் செய்தார்.

    1-1 என்ற சமநிலை ஏற்பட்டதால் கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கோல் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. 119-வது நிமிடத்தில் அந்த அணி சோலி கெல்லி கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரை இத்தாலி அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. 

    • ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
    • ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார்

    கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார்

    குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    அதே சமயம் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குற்றிப்பிடத்தக்கது. 

    • இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
    • பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சி அணி

    FIFA கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

    நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.

    இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி பிபா க்ளப் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. 

    • 2016ஆம் ஆண்டு 135ஆம் இடத்தை பிடித்திருந்திருந்தது.
    • அதன்பின் தற்போது 133ஆவது இடத்தை பிடித்துள்ளது.

    பிபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 6 இடங்கள் சரிந்து 133ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கான மோசமான தரவரிசையை பெற்றுள்ளது.

    ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது. ஜூன் 4ஆம் தேதி தாய்லாந்திற்கான எதிரான சர்வதேச நட்பு போட்டியில் 0-2 எனத் தோல்வியடைந்தது.

    இதனால் பிபா தரவரிசையில் 133ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிகவும் மோசமான இடத்திற்கு சரிந்துள்ளது. அப்போது 135ஆவது இடத்தில் இருந்தது.

    இந்தியா கடந்த 1996ஆம் ஆண்டு 94ஆவது இடத்தை பிடித்திருந்தது. அதுதான் இந்தியாவின் சிறந்த தரவரிசையாகும்.

    • நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
    • வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் மற்றும் செல்சி அணிகள் மோதுகின்றன.

    கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

    நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் மற்றும் செல்சி அணிகள் மோதுகின்றன.

    ×