என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய கால்பந்து அணி"
- மூன்று பேரில் இருந்து இறுதியாக கலித் ஜமில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- முன்னாள் பயிற்சியாளரும், ஸ்லோவாகியா பயிற்சியாளரும் போட்டியில் இருந்தனர்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான கலித் ஜமில், ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ-லீக் 2017 சீசனில் ஐஸ்வால் கால்பந்து கிளப் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி (பயிற்சியாளராக) சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
48 வயதாகும் கலித் ஜமில், தற்போது ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அனைத்து இந்திய கால்பந்து பெடரேசனின் நிர்வாகக் குழு கலித் ஜமிலை தேர்வு செய்துள்ளது.
இறுதிப் பட்டியலில் மூன்று பேரை தேர்வு செய்து வைத்திருந்தது. அதில் இரண்டு போட்டியாளர்கள் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஸ்டீப்ன் கான்ஸ்டைன் மற்றும் ஸ்லோவாகியா தேசிய அணியின் ஸ்டீபன் தர்கோவிக் ஆகியோர் ஆவார்கள்.
கலித் ஜமித் ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இந்தியா ஆகஸ்ட் 29ஆவது தேதியில் இருந்து மத்திய ஆசிய கா்பந்து அசோசியேசன் தேசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது.
- முன்னதாக சீனாவுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
- வங்காள தேசத்துடனான ஆட்டத்தில் முதற்பகுதி கோல் ஏதும் இல்லாமல் தொடர்ந்தது
ஆசியாவிலுள்ள நாடுகளுக்கிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games) நாளை மறுநாள் தொடங்கி அக்டோபர் 8 வரை சீனாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சீனாவின் ஹேங்ஜவ் நகரில் ஜியாவோஷான் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குரூப் ஏ (Group A) விளையாட்டுகளில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று 1-0 எனும் கோல்கணக்கில் தோற்கடித்தது.
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவிடம் இந்தியா 5-1 எனும் கோல்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போதைய வங்காள தேச போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், இந்தியா இப்போட்டி தொடரில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
ஆட்டத்தின் முதற்பகுதியில் இந்தியா கோல் போடுவதற்கு கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை கோட்டை விட்டது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் கிட்டத்தட்ட இதே நிலை நீடித்தது.
ஆனால் ஆட்ட நேரத்தின் 85-வது நிமிடத்தில் வங்காள தேசத்தின் கேப்டன் ரஹ்மத் மியா ஃபவுல் ஆட்டம் ஆடியதை தொடர்ந்து இந்தியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முன்வந்து சிறப்பாக கோல் போட்டார்.
இதன் மூலம் 1-0 எனும் கோல் கணக்கில் இந்தியா வென்று, ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறாமல் தனது நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமனம் செய்ய அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த பதவிக்காக மொத்தம் 40 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் இருந்து இகோர் ஸ்டிமாக் (குரோஷியா), லீ மின் சுங் (தென்கொரியா), ஆல்பர்ட் ரோகா (ஸ்பெயின்), ஹகன் எரிக்சன் (சுவீடன்) ஆகிய 4 பேர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வானார்கள்.
புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டி நேற்று நடத்தியது. இதில் இகோர் ஸ்டிமாக் நேரில் ஆஜராகி தனது திட்டத்தை விளக்கினார். மற்ற 3 பேரிடமும் ‘ஸ்கைப்’ மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது.
அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டியின் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு புதிய பயிற்சியாளர் பதவிக்கு இகோர் ஸ்டிமாக்கின் பெயரை செயற்குழுவுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிய பயிற்சியாளர் பெயர் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட இருக்கும் குரோஷியாவை சேர்ந்த 51 வயதான இகோர் ஸ்டிமாக் 1998-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த குரோஷியா அணியில் இடம் பெற்று இருந்தார். யூகோஸ்லாவியாவில் பிறந்த இகோர் ஸ்டிமாக் அந்த நாட்டின் 20 வயதுக்கு உட்பட்ட அணிக்காக 14 போட்டியில் விளையாடி இருக்கிறார்.
அதன் பிறகு குரோஷியாவுக்கு இடம் பெயர்ந்தார். குரோஷியா அணிக்காக 53 சர்வதேச போட்டிகளில் பின்கள வீரராக விளையாடி உள்ளார். அத்துடன் குரோஷியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்து இருக்கிறார்.
அடுத்த மாதம் (ஜூன்) தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் தனது பணியை தொடங்க இருக்கிறார். அவர் 3 ஆண்டு காலம் இந்த பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார். #IgorStimac #IndianFootballCoach
4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் சீனதைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித்தள்ளிய இந்திய அணி இன்று 2-வது லீக்கில் கென்யாவை எதிர்கொள்கிறது. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டியாகும்.
33 வயதான சுனில் சேத்ரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘100 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உண்மையிலேயே இதை நம்ப முடியவில்லை. இது பற்றி எனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார். இந்த மைல்கல்லை எட்டும் 2-வது இந்தியர் (முதலில் பாய்சுங் பூட்டியா) என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமை அளிக்கிறது’ என்றார். #SunilChhetri







