என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Bangladesh"

    • முன்னதாக சீனாவுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
    • வங்காள தேசத்துடனான ஆட்டத்தில் முதற்பகுதி கோல் ஏதும் இல்லாமல் தொடர்ந்தது

    ஆசியாவிலுள்ள நாடுகளுக்கிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games) நாளை மறுநாள் தொடங்கி அக்டோபர் 8 வரை சீனாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சீனாவின் ஹேங்ஜவ் நகரில் ஜியாவோஷான் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குரூப் ஏ (Group A) விளையாட்டுகளில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று 1-0 எனும் கோல்கணக்கில் தோற்கடித்தது.

    கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவிடம் இந்தியா 5-1 எனும் கோல்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போதைய வங்காள தேச போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், இந்தியா இப்போட்டி தொடரில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

    ஆட்டத்தின் முதற்பகுதியில் இந்தியா கோல் போடுவதற்கு கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை கோட்டை விட்டது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் கிட்டத்தட்ட இதே நிலை நீடித்தது.

    ஆனால் ஆட்ட நேரத்தின் 85-வது நிமிடத்தில் வங்காள தேசத்தின் கேப்டன் ரஹ்மத் மியா ஃபவுல் ஆட்டம் ஆடியதை தொடர்ந்து இந்தியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முன்வந்து சிறப்பாக கோல் போட்டார்.

    இதன் மூலம் 1-0 எனும் கோல் கணக்கில் இந்தியா வென்று, ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறாமல் தனது நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.

    • வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம்.
    • கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர்.

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது.

    வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அதன் மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி வரலாறு படைத்தது.

    இந்த நிலையில் வங்காள தேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது சவாலானது. பாகிஸ்தானில் வங்காள தேசம் நன்றாக விளையாடியது. ஆனால் வங்காள தேசத்தை வீழ்த்து வதற்கு இந்தியாவுக்கு அதிக சிரமம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

    இந்த தொடருக்கு வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம். இது வங்காளதேசத்துக்கு எதிராக உதவும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்கு உதவும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர். அவர் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரை இனி பகுதி நேர விக்கெட் கீப்பர் என்று அழைப்பது நியாயம் என்று நான் நினைக்கவில்லை. இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3-வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • ஆட்டத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்தது.

    கான்பூர்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. நேற்றைய 2-வது நாள் போட்டியும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.


    இன்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆட்டத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்தது. போட்டியை திட்டமிட்டபடி காலை 9.30 மணிக்கு தொடங்க முடியவில்லை. நடுவர்கள் ஆடுகளத்தை பாவையிட்ட பிறகு போட்டியை தொடங்க இயலாது என்று தெரிவித்தார்.

    காலை 10 மணிக்கு நடுவர்கள் மீண்டும் மைதானத்தை பார்வையிட்டனர். அப்போது இதே நிலையே நீடித்தது. போட்டியை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. 

    • வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
    • ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு வங்கதேச அரசு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்புவது தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசிடம் இருந்து வாய்மொழி கோரிக்கை வந்துள்ளது. என்பதை உறுதிப்படுத்துகிறோம். தற்போது, இந்த விஷயத்தில் நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    துபாய்:

    6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த 15-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிந்தது. இதன் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    5 முறை சாம்பியனான இலங்கை, ஹாங்காங் தொடக்க சுற்றிலேயே வெளியேறின. ‘சூப்பர்4’ சுற்று 21-ந் தேதி தொடங்கியது.

    இந்திய அணி வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தானுடன் ‘டை’ செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 2 தோல்வியை தழுவியதால் வாயப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டிக்கு நுழையும் இன்னொரு அணியை முடிவு செய்வதற்கான ஆட்டம் அபுதாபியில் நேற்று நடந்தது.


    இதில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 48.5 ஓவரில் 239 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் வங்காள தேசம் 37 ரன்னில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-மொர்தாசா தலைமையிலான வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கும் இந்திய அணி ஆசிய கோப்பையை 7-வது முறையாக வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016 (20 ஓவர்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று இருந்தது.

    இந்த போட்டித்தொடரில் ஏற்கனவே வங்காள தேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் வங்காள தேசம் அணியை சாதாரணமாக எடை போட இயலாது. பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடவேண்டும்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. நாளைய இறுதிப் போட்டிக்கு அவர்கள் திரும்புவார்கள்.


    தொடக்க வீரர்களான தவான் (327 ரன்), ரோகித் சர்மா (269 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் தவான் இரண்டு சதமும், ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதமும் அடித்துள்ளனர். இருவரது ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும் இதே போல் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்கள்.

    பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ் (இருவரும் தலா 7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), யசுவேந்திர சாஹல் (5 விக்கெட்), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    வங்காள தேசம் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 2012-ல் பாகிஸ்தானிடமும், 2016-ல் இந்தியாவிடமும் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணியில் முஷ்பிகுர் ரகிம் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 297 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்.

    பந்துவீச்சில் முஷ்டாபிசுர் ரகுமான் 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்க கூடியவர். முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஹகீப்-அல்-ஹசன் காயத்தால் விலகியது வங்காளதேச அணிக்கு பாதிப்பே.

    இரு அணிகளும் ஆசிய கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
    ×