என் மலர்
கால்பந்து

பார்சிலோனா முன்னாள் வீரரின் பிறப்புறுப்பை கடித்துக் குதறிய நாய்..!
- கிரீஸ் நாட்டில் தனது சொந்த நாயுடன் வாக்கிங் சென்றுள்ளார்.
- அப்போது மற்றொரு நாய் கார்லஸ் பெரேஸை கடுமையாக தாக்கியுள்ளது.
பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி அணிக்கு லோன் முறையில் சென்று விளையாடி வருகிறார்.
கிரீஸ் நாட்டில் தனது நாயுடன் நேற்று வாக்கிங் சென்றுள்ளார். அப்போது மற்றொரு நாய் இவர் மீது கடுமையாக தாக்கியுள்ளது. அதுவும் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது.
இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப பல வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.
Next Story






