என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிவர்பூல்"

    • கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
    • இந்த விருதை 3ஆவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலாந்து ப்ரிமீயர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிபர்பூல். இந்த அணிக்காக எகிப்தின் தலைசிறந்த வீரரான முகமது சாலா விளையாடி வருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான PFA விருதை வென்றுள்ளார். இத்துடன் மூன்று முறை இந்த விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலீஷ் ப்ரிமீயர் லீக் கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்திருந்தார். 3ஆவது முறை இந்த விருதை வெல்வதன் மூலம், இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்த மார்க் ஹியூக்ஸ், ஆலன் ஷியரெர், தியரி ஹென்ரி, ரொனால்டோ, காரத் பேலே, கெவின் டி ப்ரூயின் ஆகியோர் சாதனையை முறியடித்துள்ளார்.

    • 2022ஆம் ஆண்டு லிவர்பூல் அணி ஒப்பந்தம் செய்தது.
    • 3 வருடத்திற்குப் பிறகு 75 மில்லியன் யூரோவிக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளது.

    ஜெர்மனியின் முன்னணி கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச், லிவர்பூல் அணி வீரரான லூயிஸ் டியாஸை 4 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    லூயிஸ் டியாஸ் கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்தார். 50 போட்டிகளில் 17 கோல்கள் அடித்துள்ளார். கடந்த சீசனில் லிவர்பூல் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

    இன்றிலிருந்து நான் இந்த அன்பான குடும்பத்தின் (பேயர்ன் முனிச்) ஒரு பகுதி என டியாஸ் தெரிவித்துள்ளார். டியாஸ்க்காக பேயர்ன் முனிச் 75 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் கட்டணமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • புளோரியன் விர்ட்ஸ் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.
    • பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிவர்பூல். இந்த அணி ஜெர்மனியை சேர்ந்த அட்டாக் மிட்பீல்டர் புளோரியன் விர்ட்ஸை 157 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

    தற்போது புளோரியன் விர்ட்ஸ் பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு டிரான்ஸ்பர் கட்டணமாக இந்த தொகையை செலுத்த இருக்கிறது லிவர்பூல். இதன் மூலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ்க்கும் அதிகமான விலைக்கு டிரான்ஸ்பர் ஆன வீரர்கள் பட்டியலில் புளோரியன் விர்ட்ஸ் இணைய இருக்கிறார்.

    செல்சி அணி என்சோ பெர்னாண்டஸை கடந்த 2023-ல் 106.7 பவுண்ட்ஸ்க்கு ஒப்பந்தம் செய்தது. பின்னர் 115 மில்லியன் பவுண்ட்ஸ்க்கு மொய்சஸ் கெய்சிடோவை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டம் நடந்தது.
    • ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாகப் புகுந்ததில் பலர் காயம் அடைந்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நேற்று பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாகப் புகுந்தது.

    இதில் காயமடைந்தவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிய காயங்களுடன் மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம் தெரிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள செய்தியில், லிவர்பூலில் நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்போம். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு விரைவாகவும், தொடர்ந்தும் செயல்பட்ட போலீசார் அவசர சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். போலீசார் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியுடன் இணைந்தார்.
    • 8 வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 2 வருடம் ஒப்பந்தம் நீடிப்பு.

    எகிப்தின் நட்சத்திர கால்பந்து வீரர் முகமது சாலா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்தார். கடந்த 8 வருடங்களாக அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.

    இவருடைய ஒப்பந்தம் இந்த சீசனுடன் முடிவடைகிறது. இதனால் அணியில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது சாலா லிவர்பூல் அணியுடன் மேலும் இரண்டு வருடத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் 2027 வரை லிவர்பூல் அணிக்காக விளையாடுவார்.

    முகமது சாலா உடன் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு, விர்ஜில் வான் டிக் ஆகியோருடைய ஒப்பந்தமும் நிறைவடைகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யவில்லை.

    முகமது சாலா இது தொடர்பாக கூறுகையில் "நிச்சயமாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்களிடம் இப்போது ஒரு சிறந்த அணி உள்ளது. முன்பும் எங்களுக்கு ஒரு சிறந்த அணி இருந்தது.

    சாம்பியன் பட்டம் வென்று எனது கால்பந்து வாழ்க்கையை அனுபவிக்க எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுவதால் நான் கையெழுத்திட்டேன்.

    இது மிகவும் நல்லது. எனக்கு இங்கு எனது சிறந்த ஆண்டுகள் இருந்தன. நான் எட்டு ஆண்டுகள் விளையாடினேன். இது 10 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறத. இங்கே என் வாழ்க்கை மற்றும் கால்பந்தை போட்டியை அனுபவிக்கிறேன். என் கால்பந்து வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகள் இருந்தன" என்றார்.

    முகமது சாலா லிவர்பூல் அணிக்காக 281 போட்டிகளில் விளையாடி 182 கோல்கள் அடித்துள்ளார். இவர் விளையாடியபோது லிவர்பூல் இங்கிலீஷ் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.

    • லிவர்பூல் அணிக்கெதிராக நாட்டிங்காம் பாரஸ்ட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது.
    • 66-வது நிமிடத்தில் டியாகோ ஜோட்டா கோல் அடித்து அணி டிரா செய்ய உதவி புரிந்தார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் 2024-2025 சீசனுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி ஒன்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல், நாட்டிங்காம் பாரஸ்ட் (Nottm Forest) அணியுடன் மோதின. இதில் லிவர்பூல் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நாட்டிங்காம் பாரஸ்ட் அணியின் கிறிஸ் வுட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து லிவர்பூல் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் முதல்பாதி நேர ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    பின்னர் 2-வது பாதிநேர ஆட்டம் தோடங்கியது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டியாகோ ஜோட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது. அதன்பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

    போட்டி டிராவில் முடிந்தாலும் லிவர்பூல் 20 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்று 47 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நாட்டிங்காம் பாரஸ்ட் இந்த டிரா மூலம் 21 போட்டிகளில் 12 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகளுடன் 41 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஆர்சனல் 20 போட்டிகளில் 11-ல் வெற்றி, 7-ல் டிரா, 2-ல் தோல்வி என 40 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    மான்செஸ்டர் சிட்டி

    மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி ப்ரென்ட்போர்டு அணியை எதிர்கொண்டது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் பில் ஃபோடன் 66 மற்றும் 78-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

     இதனால் மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 10 நிமிடத்தில் ப்ரென்ட்போர்டு அணி அபாரமாக விளையாடியது. அந்த அணியின் விஸ்டா 82-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் காயத்திற்கான நேரத்தில் (90+2) கிறிஸ்டியன் நோர்கார்டு கோல் அடிக்க போட்டி டிராவில் முடிந்தது.

    இந்த டிரா மூலம் மான்செஸ்டர் சிட்டி 21 போட்டிகள் முடிவில் 10 வெற்றி, 5 டிரா மூலம் 35 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்த பிடித்துள்ளார். வெற்றி பெற்றிருந்தால் 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கும்.

    ×