search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "English Premier League"

    • இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும்.
    • லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும்.

    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும். லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    இந்நிலையில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் அர்செனல் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சான்ல் ஒளிபரப்புகிறது.

    ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இத தவற விட்டுடாதீங்க என விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

    ஒரு புள்ளி வித்தியாசத்தில் லிவர்பூலை பின்னுக்குத் தள்ளி 2-வது முறையாக பிரிமீயர் லீக்கை கோப்பையை தட்டிச் சென்றது மான்செஸ்டர் சிட்டி.
    உலகளவில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர்களில் ஒன்று இங்கிலீஷ் பிரிமீயர் லீக். 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த வருடம் மே மாதம் வரை நடைபெறும். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மான்செஸ்டர் சிட்டி அணிக்கும், யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணிக்கும் இடையே புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல கடும் போட்டி நிலவியது.



    37 போட்டிகள் முடிவில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது புரியாத புதிராக இருந்தது. மான்செஸ்டர் சிட்டி 95 புள்ளிகளும், லிவர்பூல் 94 புள்ளிகளும் பெற்றிருந்தது. மான்செஸ்டர் தோல்வி அல்லது டிரா செய்து, லிவர்பூல் வெற்றி பெற்றால், லிவர்பூல் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்தது.

    இந்நிலையில் இன்று இரு அணிகளும் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில், பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என எளிதில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 98 புள்ளிகள் பெற்றது. அதேவேளையில் லிவர்பூல் வோல்வர்ஹாம்ப்டன் அணியை 2-0 என வீழ்த்தியது. இதனால் லிவர்பூல் 97 புள்ளிகள் பெற்றது.



    ஒரு புள்ளி வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இங்கிலீஷ் பிரிமீயர் தொடரை அடுத்தடுத்து கடைசி 10 வருடத்தில் வென்ற ஒரே அணி மான்செஸ்டர் சிட்டியாகும்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியைச் சேர்ந்த பின்கள வீரரான விர்ஜில் வான் டிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகில் உள்ள தலைசிறந்த லீக்கில் இதுவும் ஒன்று.

    கடந்த 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடத்திற்கான 2018-19 சீசனில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்றிரவு நடைபெறும் போட்டிகள் முடிவில் யார் சாம்பியன் என்பது தெரியவரும்.



    மேலும், இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்படும். அதன்படி இந்த சீசனின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியின் பின்கள (Defender) வீரரான விர்ஜில் வான் டிஜ்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-13 சீசனில் பின்கள வீரர் ஒருவர் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். அதன்பின் தற்போது விர்ஜில் வான் இந்த விருதை பெற்றுள்ளார்.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் டிசர்ட் விளம்பரங்கள் மூலம் இந்த சீசனில் 625 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டியுள்ளன. #EPL
    ஐரோப்பா நாடுகளில் கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக், லா லிகா, லீக் 1, செரி ஏ, பண்டேஸ்லிகா போன்ற தொடர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளன.



    இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.



    இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.



    2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

    அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.

    மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஈடன் ஹசார்டு ஹாட்ரிக் கோல் அடிக்க செல்சி 4-1 என கார்டிப் சிட்டியை வீழ்த்தியது. #EPL #Chelsea
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் செல்சி - கார்டிஃப் சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் கார்டிஃப் சிட்டி அணியின் சோல் பம்பா கோல் அடித்து செல்சி அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 37-வது நிமிடத்தில் செல்சி அணியின் ஈடன் ஹசார்டு கோல் அடித்தார். அத்துடன் 44-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் செல்சி 2-1 என முன்னிலைப் பெற்றது.


    வில்லியன்

    2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் 80-வது நிமிடம் வரை கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் செல்சிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஹசார்டு கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் வில்லியன் ஒரு கோல் அடிக்க செல்சி 4-1 என அசத்தல் வெற்றி பெற்றது.
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் கிரிஸ்டல் பேலஸ் அணியை 2-0 என வீழ்த்தியது. மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்தது. #EPL #ManUtd #LFC
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பிரைட்டன் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-2 வீழ்த்தி பிரைட்டன் அதிர்ச்சி அளித்தது.

    ஆட்டத்தின் 25-வது மற்றம் 27-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தது பிரைட்டன். அதன்பின் 34-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லூகாகு ஒரு கோல் அடித்தார். என்றாலும் பிரைட்டன் அணி 44-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் பிரைட்டன் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் இரண்டாவது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி போக்பா கோல் அடித்தார். இதனால் பிரைட்டன் 3-2 என மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.



    நேற்றி நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஜேம்ஸ் மில்னர் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 93-வது நிமிடத்தில் (இன்ஜூரி நேரம்) சேடியோ மானே கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது. மான்செஸ்டர், லிவர்பூல் அணிகள் தாங்கள் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    இங்கிலீ்ஷ் பிரீமியர் லீக்கில் செர்ஜியே அக்யூரோவின் ஹாட்ரிக் கோலால் 6-1 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. #EPL #ManCity
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தின் 2018-19 சீசன் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. மான்செஸ்டர் சிட்டி தனது முதல் ஆட்டத்தில் அர்செனலை 2-0 என வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியை எதிர்கொண்டது.



    இதில் மான்செஸ்டர் சிட்டி அணி கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ முதல் கோலை பதிவு செய்தார். 31-வது நிமிடத்தில் கேப்ரியல் ஜீசஸ் ஒரு கோலும், 35-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோலும் அடித்தனர். முதல் பாதி நேரம் ஆட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்னாள் ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியின் ஸ்டேன்கோவிச் ஒரு கோல் அடித்தார்.



    இதனால் முதல் பாதி நேரத்தில் 3-1 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் 48-வது நிமிடத்தில் டேவிட் சில்வா ஒரு கோல் அடித்தார். 75-வது நிமிடத்தில் அக்யூரோ மேலும் ஒரு கோல் அடித்தார். 84-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் ஒரு கோல் கிடைக்க மான்செஸ்டர் சிட்டி 6-1 என வெற்றி பெற்றது.
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா லிவர்பூல் அணி உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார். #Salah #Liverpool
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் இத்தாலி கிளப்பான ரோமாவிற்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக 31 போட்டிகளில் பங்கேற்று 15 கோல்கள் அடித்திருந்தார்.

    அவரை விற்க ரோமா முடிவு செய்தது இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான லிவர்பூல் சுமார் 42 மில்லியன் யூரோ கொடுத்து 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. ரோமாவில் சரியாக விளையாடாத முகமது சாலா, லிவர்பூல் அணிக்காக நம்பமுடியாத வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2017-2018 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 32 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக 44 கோல்கள் அடித்துள்ளார்.



    சிறப்பான ஆட்டத்தால் சிறந்த ஆப்பிரிக்கா வீரர், கால்பந்து எழுத்தாளர்கள் சங்கங்களின் சிறந்த வீரர் விருது ஆகியவற்றை தட்டிச் சென்றார். 26 வயதான முகமது சாலாவின் துடிப்பான ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரியல் மாட்ரிட் உள்ளிட்ட முன்னணி கிளப்புகள் இவரை ஒப்பந்தம் செய்ய விரும்பின. அதேவேளையில் லிவர்பூல் அணி அவரை வெளியிட விரும்பவில்லை.

    இந்நிலையில் சாலா உடனான ஒப்பந்ததை லிவர்பூல் அணி ஐந்தாண்டிற்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம் 2024 வரை அவர் இதே அணியில் தொடர்வார். இவருக்கான டிரான்ஸ்பர் தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டு சம்பளம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
    பிரீமியர் லீக் 2018-19 சீசனில் அர்செனல் தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியை எதிர்கொள்கிறது. #EPL #AFC #ManCity
    இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும்.

    லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். 2017-18 சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை பின்னுக்குத் தள்ளி மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.



    இந்நிலையில் இன்று 2018-19 சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அர்செனல் அணி நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணியை தனது முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 11-ந்தேதி தொடங்கி, அடுத்த வருடம் மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    மான்செஸ்டர் யுனைடெட் தனது முதல் ஆட்டத்தில் லெய்செஸ்டர் அணியை எதிர்கொள்கிறது. லிவர்பூல் தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் ஹாம் அணியை எதிர்கொள்கிறார்.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் முன்னணி கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது. #EPL #MUN
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்தில் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட் சீசன் தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்ததால் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. பின்னர் முதல் நான்கு இடத்திற்குள் வருமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் தொடரின் பிந்தைய ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது. 2017-18 சீசனில் ஒவ்வொரு அணியும் 38 போட்டிகளில் விளையாட வேண்டும். மான்செஸ்டர் யுனைடெட் தனது 37-வது ஆட்டத்தில் நேற்றிரவு வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது.



    இதன்மூலம் மான்செஸ்டர் 37 போட்டிகள் முடிவில் 24 வெற்றி, 7 தோல்வி, 6 டிரா உடன் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 22 வெற்றி, 7 தோல்வி, 8 டிராவுடன் 74 புள்ளிகள் பெற்றுள்ளது. லிவர்பூல் 20 வெற்றி, 5 தோல்வி, 12 டிரா உடன் 72 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்து, டோட்டன்ஹானம் ஹாட்ஸ்பர், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றாலும் 78 புள்ளிகளை பெற இயலாது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது.
    ×