search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Man city"

    • இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும்.
    • லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும்.

    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும். லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    இந்நிலையில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் அர்செனல் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சான்ல் ஒளிபரப்புகிறது.

    ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இத தவற விட்டுடாதீங்க என விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

    • மான்செஸ்டர் சிட்டியின் லிகாய் 2 கோல் அடித்தார்
    • பெனால்டி வாய்ப்பு கோலைத் தவிர மேலும் கோல் அடிக்க முடியாமல் யுனைடெட் ஏமாற்றம்

    இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் எஃப்.ஏ. கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பந்தை கடத்திய முதல் நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி வீரர் லிகாய் குன்டோகான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் மான்செஸ்ட்ர் சிட்டி 1-0 என் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 31-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் மான்செஸ்டர் சிட்டி கைதான் ஓங்கியிருந்தது. 51-வது நிமிடத்தில் மீண்டும் குன்டோகான் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    இறுதியில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 7-வது முறையாக மான்செஸ்டர் சிட்டி எஃப்.ஏ. கோப்பையை வென்றுள்ளது.

    மான்செஸ்டர் சிட்டி வீரர் கெவின் டி ப்ரூயின் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் நீண்ட நாள் ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளது. #ManCity
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகளில் ஒன்று மான்செஸ்டர் சிட்டி. இந்த அணியில் பெல்ஜியத்தைச் சேர்ந்த கெவின் டி ப்ரூயின் விளையாடி வருகிறார். கடந்த 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது ப்ரூயின் 8 கோல்கள் அடித்ததுடன் 16 கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்தார்.



    இவர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். அப்போது வலது கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய நீண்ட நாட்கள் பிடிக்கும் எனத் தெரிகிறது. இதனால் சுமார் இரண்டு மாதங்கள் ப்ரூயின் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
    பிரீமியர் லீக் 2018-19 சீசனில் அர்செனல் தனது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியை எதிர்கொள்கிறது. #EPL #AFC #ManCity
    இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும்.

    லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். 2017-18 சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை பின்னுக்குத் தள்ளி மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.



    இந்நிலையில் இன்று 2018-19 சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அர்செனல் அணி நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணியை தனது முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 11-ந்தேதி தொடங்கி, அடுத்த வருடம் மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    மான்செஸ்டர் யுனைடெட் தனது முதல் ஆட்டத்தில் லெய்செஸ்டர் அணியை எதிர்கொள்கிறது. லிவர்பூல் தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் ஹாம் அணியை எதிர்கொள்கிறார்.
    ×