என் மலர்

  நீங்கள் தேடியது "Kevin De Bruyne"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மான்செஸ்டர் சிட்டி வீரர் கெவின் டி ப்ரூயின் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் நீண்ட நாள் ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளது. #ManCity
  இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகளில் ஒன்று மான்செஸ்டர் சிட்டி. இந்த அணியில் பெல்ஜியத்தைச் சேர்ந்த கெவின் டி ப்ரூயின் விளையாடி வருகிறார். கடந்த 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது ப்ரூயின் 8 கோல்கள் அடித்ததுடன் 16 கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்தார்.  இவர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். அப்போது வலது கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய நீண்ட நாட்கள் பிடிக்கும் எனத் தெரிகிறது. இதனால் சுமார் இரண்டு மாதங்கள் ப்ரூயின் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
  ×