என் மலர்

  நீங்கள் தேடியது "EPL"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலீ்ஷ் பிரீமியர் லீக்கில் செர்ஜியே அக்யூரோவின் ஹாட்ரிக் கோலால் 6-1 என மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. #EPL #ManCity
  இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தின் 2018-19 சீசன் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. மான்செஸ்டர் சிட்டி தனது முதல் ஆட்டத்தில் அர்செனலை 2-0 என வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியை எதிர்கொண்டது.  இதில் மான்செஸ்டர் சிட்டி அணி கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ முதல் கோலை பதிவு செய்தார். 31-வது நிமிடத்தில் கேப்ரியல் ஜீசஸ் ஒரு கோலும், 35-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோலும் அடித்தனர். முதல் பாதி நேரம் ஆட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்னாள் ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியின் ஸ்டேன்கோவிச் ஒரு கோல் அடித்தார்.  இதனால் முதல் பாதி நேரத்தில் 3-1 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் 48-வது நிமிடத்தில் டேவிட் சில்வா ஒரு கோல் அடித்தார். 75-வது நிமிடத்தில் அக்யூரோ மேலும் ஒரு கோல் அடித்தார். 84-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் ஒரு கோல் கிடைக்க மான்செஸ்டர் சிட்டி 6-1 என வெற்றி பெற்றது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்சியை அணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று அட்டக்கிங் மிட்பீல்டர் ஈடன் ஹசார்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். #Chelsea
  பெல்ஜியம் கால்பந்து அணியின் கேப்டன் ஈடன் ஹசார்டு. அட்டக்கிங் மிட்பீல்டர் ஆன இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். 2018 சீசனோடு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிரிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியுள்ளார்.

  இதனால் தரமான வீரரை களம் இறக்க வேண்டும் என்று ரியல் மாட்ரிட் விரும்பியது. இதனால் ஈடன் ஹசார்டை இழுக்க முயற்சி செய்தது. செல்சி இவரை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. என்றாலும் பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டே சென்றது. ஆனால் இங்கிலாந்து பிரீமியர் தொடருக்கான வீரர்கள் மாற்றம் டெட் லைன் தேதி முடிவடைந்தது.  இதனால் செப்டம்பர் மாதம் டிரான்ஸ்பர் நேரத்தின்போது ஈடன் ஹசார்டு ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2018-19 சீசன் முழுவதும் செல்சிக்காகத்தான் விளையாடுவேன் என்று ஹசார்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் நீண்ட காலமாக செல்சியில் இருப்பேன் என்பதை உறுதியாக கூற இயலாது என்று தெரிவித்தார்.

  வாரத்திற்கு 3 லட்சம் பவுண்டிற்கு புதிய ஒப்பந்தத்துடன் செல்சி அவரை தக்கவைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஒரே சீசனில் அதிக கோல் அடித்து முகமது சாலா சாதனைப் படைத்துள்ளார். #Salah
  எகிப்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான முகமது சாலா 2017-18 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். அறிமுக சீசனிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார். ஒவ்வொரு போட்டியிலும் கோல் அடித்து அசத்தி வருகிறார்.

  இந்த சீசனின் கடைசி போட்டியில் லிவர்பூல் தனது சொந்த மைதானத்தில் பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் லிவர்பூல் 4-0 என பிரைட்டனை வீழ்த்தியது.  முகமது சாலா 26-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இந்த கோலின் மூலம் 38 போட்டிகள் கொண்ட இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

  இந்த போட்டிக்கு முன் 31 கோல்கள் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ (மான்செஸ்டர் யுனைடெட் 2007-08), சுவாரஸ் (லிவர்பூல் 2013-14) சாதனையை சமன் செய்திருந்தார். இந்த போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம் இருவரின் சாதனையை முறியடித்துள்ளார்.
  ×