search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arsenal"

    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் டிசர்ட் விளம்பரங்கள் மூலம் இந்த சீசனில் 625 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டியுள்ளன. #EPL
    ஐரோப்பா நாடுகளில் கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக், லா லிகா, லீக் 1, செரி ஏ, பண்டேஸ்லிகா போன்ற தொடர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளன.



    இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.



    இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.



    2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

    அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.

    மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் அர்செனல் 5-1 என பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்ததியது. #Arsenal #PSG
    சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்செனல் - பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின.

    இதில் அர்செனல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 60-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டோபர் கோல் அடித்தார்.

    அதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டிங் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என வெற்றி பெற்றது. யுவான்டஸ் பென்பிகாவையும், செல்சி இன்டர் மிலனையும் பெனால்டி சூட்டில் வீழ்த்தியது.
    என் வாழ்க்கையில் இந்தியா செல்லும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன் என்று பிரீமியர் லீக் கால்பந்து அணியான அர்செனலின் பயிற்சியாளர் அர்சென் வெங்கர் கூறியுள்ளார்.
    அர்செனலின் 22 வருடகால பயிற்சியாளர் வாழ்க்கை முடிவுக்கு வருவதையொட்டி, அர்சென் வெங்கர் பேஸ்புக் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் இந்தியாவை மிகவும் தவற விடுவதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அர்சென் வெங்கர் கூறுகையில் ‘‘எனது வாழ்க்கையில் நான் இந்தியா செல்வதை தவற விட்டுவிட்டதும் ஒன்று. நான் இந்தியா செல்வ ஆர்வாக இருக்கிறேன். அது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை அங்கு சென்றதில்லை.

    நான் எப்போதுமே அர்செனல் அணி இந்தியா சென்று விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். இதற்கான வாய்ப்பு நெருங்கி வந்தது. ஆனால் இதுவரை நிகழ்ந்தது இல்லை. அங்குள்ள சமூகம் மாறுபட்டது. அங்குள்ள தத்துவம் மற்ற நாடுகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது’’ என்றார்.

    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று அர்செனல் எஃப்சி. இந்த அணியின் பயிற்சியாளராக அர்செனே வெங்கர் பணியாற்றி வருகிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 68 வயதாகும் அர்சென் வெங்கர் கடந்த 1996-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்செனல் அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றார்.



    இவரது தலைமையில் அர்செனல் 21 சீசனில் விளையாடி மூன்று முறை பிரீமியர் லீக் டைட்டிலை வாங்கியுள்ளது. அத்துடன் 7 முறை எஃப்ஏ கோப்பையையும், 7 முறை கம்முனிட்டி ஷில்டையும் கைப்பற்றியுள்ளது. 20 வருடமாக தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடியுள்ளது. 704 வெற்றிகளை பெற்றுள்ளது.

    கடந்த சீசனில் அர்செனல் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அர்சேன் வெங்கர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் ரசிகர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அர்செனல் கிளப் அவரது பதவிக்காலத்தை நீட்டித்தது. இந்த சீசனிலும் அர்செனல் மோசமாக விளையாடி வருகிறது. இதனால் வெங்கருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வெங்கர் இந்த சீசனோடு அர்செனல் பயிற்சியளார் பதவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
    ×