என் மலர்
கால்பந்து
- 2022ஆம் ஆண்டு லிவர்பூல் அணி ஒப்பந்தம் செய்தது.
- 3 வருடத்திற்குப் பிறகு 75 மில்லியன் யூரோவிக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளது.
ஜெர்மனியின் முன்னணி கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச், லிவர்பூல் அணி வீரரான லூயிஸ் டியாஸை 4 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
லூயிஸ் டியாஸ் கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்தார். 50 போட்டிகளில் 17 கோல்கள் அடித்துள்ளார். கடந்த சீசனில் லிவர்பூல் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இன்றிலிருந்து நான் இந்த அன்பான குடும்பத்தின் (பேயர்ன் முனிச்) ஒரு பகுதி என டியாஸ் தெரிவித்துள்ளார். டியாஸ்க்காக பேயர்ன் முனிச் 75 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் கட்டணமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது.
- இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின.
பாசல்:
14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது. நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது. மரியோனா கால்டென்டி இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்து சமன் செய்தது. அலெசியா ருஸ்சோ இந்த கோலை பதிவு செய்தார்.
ஆட்டம் முடியும் நேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. இதனால் கூடுதல் நேரமான 30 நிமிடம் கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் மேலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் சாம்பியன் யார் என்பதை நிர்ணயம் செய்வதற்காக பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது.
இதில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ஐரோப்பிய கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இங்கிலாந்து தொடர்ந்து 2-வது முறையாக ஐரோப்பியன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஜெர்மனியை தோற்கடித்து கோப்பையை வென்று இருந்தது.
- இங்கிலாந்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகின்றன.
ஜெனீவா:
14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின.
போட்டியின் 33-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்காக பார்பரா போனான்சியா கோல் அடித்தார். ஆட்டம் முடியும் தருவாயில் அதாவது 96-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை மிச்செல் அகேமாங் பதில் கோல் அடித்து சமன் செய்தார்.
1-1 என்ற சமநிலை ஏற்பட்டதால் கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கோல் அடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. 119-வது நிமிடத்தில் அந்த அணி சோலி கெல்லி கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரை இத்தாலி அணியால் மேலும் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
- ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
- ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார்
கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார்
குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
அதே சமயம் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குற்றிப்பிடத்தக்கது.
- இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
- பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சி அணி
FIFA கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி பிபா க்ளப் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
- 2016ஆம் ஆண்டு 135ஆம் இடத்தை பிடித்திருந்திருந்தது.
- அதன்பின் தற்போது 133ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பிபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 6 இடங்கள் சரிந்து 133ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கான மோசமான தரவரிசையை பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது. ஜூன் 4ஆம் தேதி தாய்லாந்திற்கான எதிரான சர்வதேச நட்பு போட்டியில் 0-2 எனத் தோல்வியடைந்தது.
இதனால் பிபா தரவரிசையில் 133ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிகவும் மோசமான இடத்திற்கு சரிந்துள்ளது. அப்போது 135ஆவது இடத்தில் இருந்தது.
இந்தியா கடந்த 1996ஆம் ஆண்டு 94ஆவது இடத்தை பிடித்திருந்தது. அதுதான் இந்தியாவின் சிறந்த தரவரிசையாகும்.
- நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் மற்றும் செல்சி அணிகள் மோதுகின்றன.
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் மற்றும் செல்சி அணிகள் மோதுகின்றன.
- இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம்.
- ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் சக வீரர் மறைவுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம். இப்போதுதான் திருமணமும் செய்து கொண்டார். ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்.
என கூறினார்.
- லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
- 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரேவின் மறைவுக்குப் பிறகு போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது.
கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
- 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.
FIFA கிளப் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜுவென்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
இது குரூப்பில் மான்செஸ்டர் சிட்டியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.

அமெரிக்காவின் கேம்பிங் வேர்ல்ட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மி டோகு மூலம் மான்செஸ்டர்சிட்டி முன்னிலை பெற்றது.
ஆனால் மூன்று நிமிடங்களுக்குள், மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சனின் தவறைப் பயன்படுத்திக் கொண்ட ஜுவென்டஸ் அணி, மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
26வது நிமிடத்தில், பியர் கலுலு கோல் அடித்ததால் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் முன்னிலை பெற்றது. மாற்று வீரர் எர்லிங் ஹாலண்ட் இரண்டாவது பாதியின் ஏழு நிமிடங்களில் மூன்றாவது கோலை அடித்தார்.
பின்னர் பில் ஃபோடன் மூன்று நிமிடங்களுக்குள் மற்றொரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து சவின்ஹோவின் நீண்ட தூர ஸ்ட்ரைக் மான்சஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தது.

பில் ஃபோடன்
போட்டியின் போது எர்லிங் ஹாலண்ட் தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.
டுசன் விளாஹோவிக் 84வது நிமிடத்தில் ஜுவென்டஸின் ஆறுதல் கோலை அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் மான்சஸ்டர் சிட்டி வெற்றியைப் பதிவு செய்தது.
- இன்டர் மிலன் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
- டார்ட்மென்ட் (ஜெர்மனி) 1-0 என்ற கோல் கணக்கில் உல்சானை (கொரியா) தோற்கடித்தது.
சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை 'இ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் (இத்தாலி) -ரிவர் பிளேட் ( அர்ஜென்டினா) அணிகள் மோதின. இதில் இன்டர் மிலன் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மோன்டேரி (மெக்சிகோ) 4-0 என்ற கோல்கணக்கில் உர்வாவை (ஜப்பான்) தோற்கடித்தது. இந்த பிரிவில் இன்டர்மிலன் 7 புள்ளிகளுடனும், மோன்டேரி 5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதிபெற்றன.
எப் பிரிவில் நடந்த ஆட்டங்களில் டார்ட்மென்ட் (ஜெர்மனி) 1-0 என்ற கோல் கணக்கில் உல்சானை (கொரியா) தோற்கடித்தது. புளூமிமெனன்ஸ் ( பிரேசில்) -மாமெலோடி சன்டவுண்ஸ் (தென் ஆப்பிரிக்கா ) அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. இந்த பிரிவில் டார்ட்மென்ட் 7 புள்ளிகளுடனும், புளூமிமெனன்ஸ் 5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
- கிளப் அணிகளுக்கான 21-வது உலக கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
- ‘டி’ பிரிவில் பிளமென்கோ 7 புள்ளியுடனும், செல்சியா 6 புள்ளியுடனும் 2-வது சுற்றுக்கு முன்னேறின.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலக கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 'டி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் செல்சியா (இங்கிலாந்து), 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்பெரன்ஸ் ஸ்போட்டிவ்வை (துனிசியா) தோற்கடித்தது. பிளமென்கோ (பிரேசில்)-லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த பிரிவில் பிளமென்கோ 7 புள்ளியுடனும், செல்சியா 6 புள்ளியுடனும் 2-வது சுற்றுக்கு முன்னேறின.
'சி' பிரிவில் இருந்து பெனிபிகா (போர்ச்சுக்கல்) பேயர்ன் முனிச் (ஜெர்மனி) முதல் 2 இடங்களை பிடித்து 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெற்றன. பெனிபிகா அணி 1-0 என்ற கணக்கில் பேயர்ன் முனிச்சை வீழ்த்தியது. ஆக்லாந்து சிட்டி-போகா ஜானியார்ஸ் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.






