என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "European Women's Championship Football"

    • 14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது.
    • இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின.

    பாசல்:

    14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது. நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது. மரியோனா கால்டென்டி இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்து சமன் செய்தது. அலெசியா ருஸ்சோ இந்த கோலை பதிவு செய்தார்.

    ஆட்டம் முடியும் நேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. இதனால் கூடுதல் நேரமான 30 நிமிடம் கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் மேலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் சாம்பியன் யார் என்பதை நிர்ணயம் செய்வதற்காக பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது.

    இதில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ஐரோப்பிய கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

    இங்கிலாந்து தொடர்ந்து 2-வது முறையாக ஐரோப்பியன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஜெர்மனியை தோற்கடித்து கோப்பையை வென்று இருந்தது.

    • இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
    • 56 ஆண்டு கால ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

    லண்டன்:

    ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 56 ஆண்டு கால ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்த வெற்றிக்கு பின் இங்கிலாந்து பெண்கள் கால்பந்து அணியின் மேலாளர், நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வு பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த இங்கிலாந்து கால்பந்து வீராங்கனைகள் செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த அணியின் மேலாளர், நிர்வாகிகளுக்கு நடுவே சென்றனர்.

    மேலும், அவர்களை சுற்றி ஆடி பாடி கொண்டாடினர். இப்போது, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் இருந்த மேஜை மீது ஏறிய இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர் மற்றும் வீராங்கனைகள் ஆட்டம்போட்டனர். இந்த நிகழ்வால் அங்கு கூடியிருந்த அனைவரும் மகிழ்சி வெள்ளத்தில் ஆரவாரமடைந்தனர்.

    செய்தியாளர் சந்திப்பின்போது வீராங்கனைகள் ஆடி பாடி தங்கள் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×