என் மலர்tooltip icon

    கால்பந்து

    உலக கோப்பை கிளப் கால்பந்து: செல்சியா, பிளமென்கோ 2-வது சுற்றுக்கு தகுதி
    X

    உலக கோப்பை கிளப் கால்பந்து: செல்சியா, பிளமென்கோ 2-வது சுற்றுக்கு தகுதி

    • கிளப் அணிகளுக்கான 21-வது உலக கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
    • ‘டி’ பிரிவில் பிளமென்கோ 7 புள்ளியுடனும், செல்சியா 6 புள்ளியுடனும் 2-வது சுற்றுக்கு முன்னேறின.

    சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலக கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலை 'டி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் செல்சியா (இங்கிலாந்து), 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்பெரன்ஸ் ஸ்போட்டிவ்வை (துனிசியா) தோற்கடித்தது. பிளமென்கோ (பிரேசில்)-லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த பிரிவில் பிளமென்கோ 7 புள்ளியுடனும், செல்சியா 6 புள்ளியுடனும் 2-வது சுற்றுக்கு முன்னேறின.

    'சி' பிரிவில் இருந்து பெனிபிகா (போர்ச்சுக்கல்) பேயர்ன் முனிச் (ஜெர்மனி) முதல் 2 இடங்களை பிடித்து 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெற்றன. பெனிபிகா அணி 1-0 என்ற கணக்கில் பேயர்ன் முனிச்சை வீழ்த்தியது. ஆக்லாந்து சிட்டி-போகா ஜானியார்ஸ் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.

    Next Story
    ×