என் மலர்
கால்பந்து

FIFA கிளப் உலகக்கோப்பை: மண்ணைக் கவ்விய ஜுவென்டஸ்.. மான்செஸ்டர் சிட்டி மகத்தான வெற்றி!
- மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
- 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.
FIFA கிளப் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜுவென்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
இது குரூப்பில் மான்செஸ்டர் சிட்டியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.
அமெரிக்காவின் கேம்பிங் வேர்ல்ட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மி டோகு மூலம் மான்செஸ்டர்சிட்டி முன்னிலை பெற்றது.
ஆனால் மூன்று நிமிடங்களுக்குள், மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சனின் தவறைப் பயன்படுத்திக் கொண்ட ஜுவென்டஸ் அணி, மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
26வது நிமிடத்தில், பியர் கலுலு கோல் அடித்ததால் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் முன்னிலை பெற்றது. மாற்று வீரர் எர்லிங் ஹாலண்ட் இரண்டாவது பாதியின் ஏழு நிமிடங்களில் மூன்றாவது கோலை அடித்தார்.
பின்னர் பில் ஃபோடன் மூன்று நிமிடங்களுக்குள் மற்றொரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து சவின்ஹோவின் நீண்ட தூர ஸ்ட்ரைக் மான்சஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தது.
பில் ஃபோடன்
போட்டியின் போது எர்லிங் ஹாலண்ட் தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.
டுசன் விளாஹோவிக் 84வது நிமிடத்தில் ஜுவென்டஸின் ஆறுதல் கோலை அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் மான்சஸ்டர் சிட்டி வெற்றியைப் பதிவு செய்தது.






