என் மலர்
கால்பந்து

கிளப் உலக கோப்பை கால்பந்து: இன்டர் மிலன், டார்ட்மென்ட் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி
- இன்டர் மிலன் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
- டார்ட்மென்ட் (ஜெர்மனி) 1-0 என்ற கோல் கணக்கில் உல்சானை (கொரியா) தோற்கடித்தது.
சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை 'இ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் (இத்தாலி) -ரிவர் பிளேட் ( அர்ஜென்டினா) அணிகள் மோதின. இதில் இன்டர் மிலன் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மோன்டேரி (மெக்சிகோ) 4-0 என்ற கோல்கணக்கில் உர்வாவை (ஜப்பான்) தோற்கடித்தது. இந்த பிரிவில் இன்டர்மிலன் 7 புள்ளிகளுடனும், மோன்டேரி 5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதிபெற்றன.
எப் பிரிவில் நடந்த ஆட்டங்களில் டார்ட்மென்ட் (ஜெர்மனி) 1-0 என்ற கோல் கணக்கில் உல்சானை (கொரியா) தோற்கடித்தது. புளூமிமெனன்ஸ் ( பிரேசில்) -மாமெலோடி சன்டவுண்ஸ் (தென் ஆப்பிரிக்கா ) அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. இந்த பிரிவில் டார்ட்மென்ட் 7 புள்ளிகளுடனும், புளூமிமெனன்ஸ் 5 புள்ளிகளுடனும் முதல் 2 இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.






