என் மலர்tooltip icon

    கால்பந்து

    அடுத்த மாதம் ஐதராபாத் வருகிறார் மெஸ்சி:  உறுதி செய்த ரேவந்த் ரெட்டி
    X

    அடுத்த மாதம் ஐதராபாத் வருகிறார் மெஸ்சி: உறுதி செய்த ரேவந்த் ரெட்டி

    • மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
    • மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்:

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், அடுத்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×