என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லியோனல் மெஸ்ஸி"

    • முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற மெஸ்ஸி தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.
    • அதன்பின் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    கொல்கத்தா:

    அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்சி மூன்று நாள் பயணமாக 13-ம் தேதி இந்தியா வந்தார்.

    முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற அவர் தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். அதன்பின், அங்குள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். ரசிகர்கள் முண்டியடித்ததால் அரை மணி நேரத்திற்குள்ளாகவே மெஸ்சி அங்கிருந்து புறப்பட்டார்.

    இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்ததாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட் வாங்கியிருந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த இருக்கைகளை உடைத்தனர், தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைதுசெய்தனர்.

    மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வாவே பொறுப்பெனவும், முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை எனவும் பலரும் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்காக அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பினார். அதில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். இந்த ராஜினாமாவை மம்தா பானர்ஜியும் ஏற்றுக்கொண்டார்.

    • ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
    • இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தனர்.

    இந்நிலையில் இன்றுடன் அவர்களின் பயணம் முடிவடைந்து அவர்கள் புறப்பட்டனர்.

    3 நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார்.

    அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.

    அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.

    இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

    மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

    மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.

    இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றார். மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

    மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

    நிகழ்வில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய மெஸ்ஸி, "நன்றி டெல்லி! விரைவில் சந்திப்போம்" என்று கூறியபோது அரங்கில் இருந்தவர்களிடமிருந்து பெரும் கரவொலி எழுந்தது.

    மெஸ்ஸி பேசியதாவது "இந்த நாட்களில் இந்தியாவில் நீங்கள் எங்களுக்குக் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி.

    இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தது எங்களுக்கு உண்மையிலேயே ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது.

    இது தீவிரமானதாகவும் மிகக் குறுகியதாகவும் இருந்தபோதிலும், இந்த அன்பைப் பெற்றது அற்புதமாக இருந்தது.

    இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும், ஆனால் அதை நேரடியாக அனுபவித்தது நம்பமுடியாததாக இருந்தது."

    இந்த நாட்களில் நீங்கள் எங்களுக்காகச் செய்த அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது. முற்றிலும் வியக்கத்தக்கது.

    எனவே, இந்த அன்புக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் நிச்சயமாக ஒரு நாள் திரும்புவோம்.

    ஒருவேளை ஒரு போட்டியில் விளையாடுவதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திற்காகவோ.ஆனால் நாங்கள் நிச்சயமாகத் திரும்புவோம். நன்றி, நன்றி." என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே பனிமூட்டத்தால் மெஸ்ஸியின் விமானம் மும்பையில் இருந்து வர தாமதமானதாலும், பிரதமர் மோடி ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் கிளம்பியதாலும் அவர்கள் இருவரின் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 2-வது நாள் பயணமாக மெஸ்ஸி நேற்று மும்பை சென்றார்.
    • 3-வது நாள் சுற்றுப்பயணமாக மெஸ்ஸி இன்று டெல்லி சென்றுள்ளார்.

    புதுடெல்லி:

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார். அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.

    அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.

    இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

    மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர். மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.

    இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் மெஸ்ஸி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் அவரிடம் கை கொடுக்க ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் கொல்கத்தாவின் நிகழ்ச்சியில் இதற்கு ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்திருந்த நிலையில், ரசிகர்கள் அவரை காண முடியாமல் திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

    • தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார்.
    • கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மும்பை வான்கடே மைதானத்தில் சந்தித்து உரையாடிக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.  

    அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் கொல்கத்தா சென்ற மெஸ்ஸி, அங்கு தன்னுடைய 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து ரசிகர்களை சால்ட் லேக் மைதானத்தில் சந்தித்துவிட்டு சில நிமிடங்களில் வெளியேறினார். இதன்பின் ஹைதராபாத் வந்த மெஸ்ஸிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி ஆடினார். அதேபோல் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு கைகளை காட்டினார். இந்த நிலையில் இன்று மும்பையில் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். வான்கடே மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.

    அப்போது மெஸ்ஸியும், சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துக் கொண்டனர். மெஸ்ஸியுடன் சில நிமிடங்கள் உரையாடிய சச்சின் தன்னுடைய 2011 உலகக்கோப்பை ஜெர்சியை கையெழுத்திட்டு மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார். அதனை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்ட மெஸ்ஸி, சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி கூறினார். இதன்பின் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 10 ஜெர்சியை சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடினார். அதேபோல் கால்பந்தில் மெஸ்ஸி நம்பர் 10 ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார்.

    இதனால் ஜெர்சி 10ஐ சச்சின் பரிசாக அளித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×