என் மலர்tooltip icon

    இந்தியா

    மெஸ்ஸி நிகழ்ச்சியில் குளறுபடி: மேற்குவங்காள விளையாட்டுத்துறை மந்திரி ராஜினாமா
    X

    மெஸ்ஸி நிகழ்ச்சியில் குளறுபடி: மேற்குவங்காள விளையாட்டுத்துறை மந்திரி ராஜினாமா

    • முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற மெஸ்ஸி தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.
    • அதன்பின் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    கொல்கத்தா:

    அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்சி மூன்று நாள் பயணமாக 13-ம் தேதி இந்தியா வந்தார்.

    முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற அவர் தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். அதன்பின், அங்குள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். ரசிகர்கள் முண்டியடித்ததால் அரை மணி நேரத்திற்குள்ளாகவே மெஸ்சி அங்கிருந்து புறப்பட்டார்.

    இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்ததாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட் வாங்கியிருந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த இருக்கைகளை உடைத்தனர், தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைதுசெய்தனர்.

    மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வாவே பொறுப்பெனவும், முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை எனவும் பலரும் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்காக அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பினார். அதில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். இந்த ராஜினாமாவை மம்தா பானர்ஜியும் ஏற்றுக்கொண்டார்.

    Next Story
    ×