என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய பயணம்"
- இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
- இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை என வெளியுறவுத்துறை கூறியது.
புதுடெல்லி:
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்கமுடியாது. ஆகையால் நாங்களும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்வோம். இதுதொடர்பாக போர்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை குறித்த டிரம்பின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உறுப்பு நாடுகளுக்கு இடையே முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கும், இந்தியா பசுபிக் பிராந்திய நலன் குறித்து விவாதிக்கவும் மதிப்புமிக்க தலமாக குவாட் அமைப்பை இந்தியா கருதுகிறது.
குவாட் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. சமீபத்தில் மும்பையில் இந்திய கடலோர பாதுகாப்பு வாரம் நடந்தது. குவாட் துறைமுகம் தொடர்பான கருத்தரங்கமும் நடந்தது.
இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை. இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை. இது குறித்து அறிந்ததும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
கடந்த சில மாதங்களாக ரஷிய ராணுவத்தில் பல இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவில் விடுவிக்கவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த விஷயத்தை மீண்டும் ரஷிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளோம்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 44 இந்தியர்கள் தற்போது ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ரஷிய தரப்புடன் தொடர்பில் இருக்கிறோம். இவர்களின் குடும்பங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ரஷிய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
- வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.
- பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.
புதுடெல்லி:
இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார்.
வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
கெய்ர் ஸ்டார்மரும், மோடியும் 9-ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ராஜ்நாத் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்து எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்துகிறார். பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கிமின் நாது லா கணவாய், உத்தராகண்டின் லிபுலெ கணவாய், இமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கான பயண ஆலோசனையை கனடா புதுப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளனர்.
- அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவிகேட்டது. இதனால் இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியது.
தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 20, 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கை சென்று இலங்கை அதிபரின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.
அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.
- பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
புதுடெல்லி:
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பொருளாதாரம், பாதுகாப்பு, இலங்கை தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கூறும்போது, இந்தியா-இலங்கை இடையேயான தூதரக உறவுகளில் 75-வது ஆண்டை கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், மேலும் உத்வேகத்தை வழங்குவதற்கும் இரு தலைவர்கள் சந்திப்பு மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவுக்கு பயணம் மேற் கொள்வதற்கு முன்பு அவரை இலங்கை தமிழ் கட்சிகள் சந்தித்து 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக விவாதித்தனர். மேலும் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தில், இந்தியா வரும் இலங்கை அதிபர் விக்ரமசிங்கேவிடம் 13-வது திருத்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்த கோரி இருந்தனர்.
அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், விக்ரமசிங்கேவிடம் இலங்கை தமிழர் விவகாரம், மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. இந்தியாவின் உதவியால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம் என்று இலங்கை தெரிவித்திருந்த நிலையில் அந்நாட்டு அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.
- இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கைெயழுத்தானது.
புதுடெல்லி:
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பொருளாதாரம், பாதுகாப்பு, இலங்கை தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கூறும்போது, இந்தியா-இலங்கை இடையேயான தூதரக உறவுகளில் 75-வது ஆண்டை கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் உறவுகளை மறுபரி சீலனை செய்வதற்கும், மேலும் உத்வேகத்தை வழங்குவதற்கும் இரு தலைவர்கள் சந்திப்பு மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கைெயழுத்தானது. மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நாகை-இலங்கையிடையே பயணிகள் கப்பல் இயக்கவும், இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள்கட்டித்தரவும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் இந்தியாவில் யு.பி.ஐ தொழில் நுட்பத்தை இலங்கை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவுக்கு பயணம் மேற் கொள்வதற்கு முன்பு அவரை இலங்கை தமிழ் கட்சிகள் சந்தித்து 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக விவாதித்தனர். மேலும் பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தில், இந்தியா வரும் இலங்கை அதிபர் விக்ரமசிங்கேவிடம் 13-வது திருத்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்த கோரி இருந்தனர்.
அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், விக்ரமசிங்கேவிடம் இலங்கை தமிழர் விவகாரம், மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தபோது அந்நாட்டுக்கு இந்தியா உதவிகளை வழங்கியது. இந்தியாவின் உதவியால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம் என்று இலங்கை தெரிவித்திருந்த நிலையில் அந்நாட்டு அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
- நான் இந்தியாவுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
வாஷிங்டன்:
உலக பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இரண்டு நாள் பயணமாக நாளை(21-ந்தேதி) இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 23-ந்தேதி டெஸ்லா நிறுவன கூட்டத்தில் எலான் மஸ்க் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் அவரது இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் எக்ஸ் தள பக்கத்தில் கூறும்போது, துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இருப்பதால் இந்திய பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் இந்தியாவுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார்.
- பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
புதுடெல்லி:
ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். தூதரக அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்பட்டுள்ள சி295 விமான ஆலையை மோடியும், பெட்ரோ சான்செசும் இணைந்து திறந்து வைக்கிறார்கள்.
பிரதமர் மோடி-பெட்ரோ சான்செஸ் சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






