அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்

வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.
அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்
Published on

புதுடெல்லி:

இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார்.

வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

கெய்ர் ஸ்டார்மரும், மோடியும் 9-ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com