என் மலர்
நீங்கள் தேடியது "Wang Yi"
- ஜப்பான் பிரதமருக்கு சீன வெளியுறவு மந்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- ஜப்பான் நடவடிக்கையில் ஈடுபட்டால் சீனா பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
பீஜிங்:
தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமருக்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யீ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜப்பான் பிரதமரின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. தைவான் பிரச்சனையில் அவர்கள் ராணுவ தலையீட்டுக்கு முயற்சிப்பது தவறான சமிக்ஞையாகக் கருதப்படும். அவர்கள் சிவப்பு கோட்டை தாண்டக் கூடாது. ஜப்பான் நடவடிக்கையில் ஈடுபட்டால் சீனா உறுதியாக பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
- சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.
- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி:
சீன வெளியுறவு மந்திரியான வாங் யீ இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். அவர் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வாங் யீ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர்.
இந்நிலையில், எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை டில்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணம் குறித்து பிரதமர் மோடியுடன் வாங் யீ பேசினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ராஜ்நாத் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்து எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்துகிறார். பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கிமின் நாது லா கணவாய், உத்தராகண்டின் லிபுலெ கணவாய், இமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.
- சீன வெளியுறவு மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அவர் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார்.
முனீச்:
சீனாவின் வெளியுறவு துறை மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணத்தின் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மேக்ரனைச் சந்திக்கவுள்ளார். இந்தாண்டின் பிற்பாதியில் இடம்பெறவுள்ள மேக்ரனின் சீனப் பயணம் குறித்து விவாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் பொறுப்பை ஏற்றபிறகு வாங் யீ மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
எட்டு நாள்கள் நீடிக்கும் அண்மைப் பயணத்தின்போது அவர், இத்தாலி, ஹங்கேரி, ரஷியா ஆகியவற்றுக்கும் செல்கிறார்.
ரஷியாவுடனான நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது சீனா. ஐரோப்பாவிலும் பெய்ஜிங்கின் நற்பெயரை வலுப்படுத்துவது அவரது பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில்,முனீச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் கலந்து கொண்டார். அப்போது அவர் சீன வெளியுறவு மந்திரியை சந்தித்துப் பேசினார்.
உளவு பலூன் பறந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் இரு மந்திரிகளும் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
- மியான்மரில் 2021, பிப்ரவரி மாதத்தில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- சீன வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தருவதற்கு மியான்மர் நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பர்மா:
சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம் மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
மீகாங் டெல்டா பகுதியில் நீர்மின்சாரத் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.
இந்நிலையில், மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக மியான்மர் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், மியான்மர் நாட்டில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டது நாட்டின் இறையாண்மை மற்றும் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகும் என தெரிவித்தார்.

அதற்கு இதர நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #koreanpeninsula #opportunityforpeace #wangyi






