என் மலர்
நீங்கள் தேடியது "சீன வெளியறவு மந்திரி"
- ஜப்பான் பிரதமருக்கு சீன வெளியுறவு மந்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- ஜப்பான் நடவடிக்கையில் ஈடுபட்டால் சீனா பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
பீஜிங்:
தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமருக்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யீ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜப்பான் பிரதமரின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. தைவான் பிரச்சனையில் அவர்கள் ராணுவ தலையீட்டுக்கு முயற்சிப்பது தவறான சமிக்ஞையாகக் கருதப்படும். அவர்கள் சிவப்பு கோட்டை தாண்டக் கூடாது. ஜப்பான் நடவடிக்கையில் ஈடுபட்டால் சீனா உறுதியாக பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
- புதிய வெளியுறவு மந்திரியாக வாங் யி நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- கின் கேங் பீஜிங்கில் ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரியை சந்தித்தபிறகு பொதுவெளியில் வரவில்லை.
பீஜிங்:
சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி கின் கேங் சுமார் ஒரு மாதகாலமாக பொதுவெளியில் தோன்றவில்லை. ஜூன் 25ம் தேதி பீஜிங்கில் ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஆண்ட்ரே ருடெங்கோவை சந்தித்தபிறகு அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் தெரியாமல் இருந்தது. அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கின் கேங் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு மந்திரியாக வாங் யி நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
கின் கேங் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அவரது பதவிநீக்கம் தொடர்பான உத்தரவில் அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கிற்கு பதிலாக கின் கேங் வெளியுறவு மந்திரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






